நிதி அமைச்சர்: கரிம வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும்

நிதி அமைச்சர்: கரிம வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும்

2 mins read
d71c7671-2eb2-4091-a17f-1e0a2dfb7fdb
-

சிங்­கப்­பூ­ரில் மாற்­றி­ய­மைக்­கப்­படும் 2024ஆம் ஆண்­டுக்­கான கரிம வரி விகி­தம் குறித்து அடுத்த

ஆண்­டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின்­போது அறி­விக்­கப்­­படும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டு வரை நிலைமை எவ்­வாறு இருக்­கும் என்­பதை மாற்­றி­ய­மைக்­கப்­படும் விகி­தத்­தைக் கொண்டு தெரிந்­து­கொள்­ள­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கரிம விலை மிக­வும் குறை­வாக இருப்­ப­தாக 35வது சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் கலந்­து­ரை­யா­ட­லில் அமைச்­சர் வோங் நேற்று கூறி­னார்.

இதன் கார­ண­மா­கவே கரிம வரி விகி­தத்தை அர­சாங்­கம் மறு­ஆய்வு செய்­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

கரிம விலை­யைப் பிர­திப­லிக்க அதன் வரி விகி­தம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் முத­லீடு செய்­வது தொடர்­பாக எடுக்­கப்­படும் முடி­வு­களை அது மாற்­றும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

கரிம வரி விகி­தம் அதி­க­ரிக்­கப்­படும் அதே வேளை­யில், குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்­கும் நடுத்­தர வர்க்­கத்­தினருக்கும் உதவி செய்­யும் வகை­யில் யு-சேவ்

தள்­ளு­படி வழங்­கப்­படும் என்­றார் திரு வோங்.

கரிம வரியை 2019ஆம்

ஆண்­டில் சிங்­கப்­பூர் அறி­மு­கப்­

ப­டுத்­தி­யது.

இந்த வரியை அறி­மு­கப்­ப­டுத்­திய முதல் தென்­கி­ழக்­கா­சிய நாடாக சிங்­கப்­பூர் திகழ்­கிறது. ஆனால் ஒரு டன்­னுக்கு $5 வரி விகி­தம் மிக­வும் குறைவு என்று கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல்

பசு­மைத் திட்­டத்­துக்கு மாறும் வேளை­யில், கரிம விலை முக்­கிய இடம்­பெ­று­வ­தாக திரு வோங் கூறி­னார். மாற்­றத்­து­டன் பழ­கிக்­கொள்ள வர்த்­த­கங்­க­ளுக்­குப் போதிய நேரம் அவ­சி­யம் என்­பது தமக்­குத் தெரி­யும் என்று அவர் கூறினார்.

சுத்­த­மான ஹைட்­ரோ­ஜன், கரி­மம் ஆகி­யவை தற்­போ­தைய ஆகச் சிறந்த தெரி­வு­க­ளாக இருக்­கின்­றன. இருப்­பி­னும், உட­னடி நடை­

மு­றைக்கு இந்­தத் தொழில்­நுட்­பங்­கள் தயா­ராக இல்லை. எனவே, ஆய்வு, மேம்­பாடு ஆகி­ய­வற்­றில் சிங்­கப்­பூர் அதிக அளவு முத­லீடு செய்­வ­தாக அமைச்­சர் வோங் கூறி­னார்.

"மின்­சா­ரத்தை இறக்­கு­மதி செய்­வது உத­வக்­கூ­டும். ஆனால் சிங்­கப்­பூ­ருக்­குத் தேவை­யான ஒட்டுமொத்த அளவிலான மின்­சா­ரத்­தை­யும் இறக்­கு­மதி செய்ய நாங்­கள் விரும்­ப­வில்லை.

"மின்­சார இறக்­கு­ம­திக்கு வரம்பு­ கள் உள்­ளன. அதில் தொழில்­நுட்ப விவ­கா­ரங்­க­ளு­டன் எரி­சக்­திப் பாது­காப்­புப் பிரச்­சி­னை­களும் உள்­ளன," என்று திரு வோங் தெரி­வித்­தார்.

வரித் தொகையை அதி­க­ரிப்­

ப­தன் மூலம் தொடர் செல­வு­

க­ளுக்கு நீடித்த நிலைத்­தன்­மை­யு­ட­னும் பொறுப்­பு­ட­னும் நிதி திரட்ட முடி­யும் என்­றார் அவர்.