சமூக-அரசியல் இணையத்தளமான தி ஆன்லைன் சிட்டிசனின் உரிமத்தை தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது.
தனக்கு நிதி வழங்குவோரின் விவரங்களை அந்த இணையத் தளம் வெளியிட மறுத்து, தொடர்ந்து விதிமுறைக்கு உட்படாமல் நடந்துகொண்டதால் அதன் உரிமம் ரத்தானது.
இணையத்தில் சிங்கப்பூர் அரசியல் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடத்தும் இணையத்தளங்கள், அவற்றுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்ற விவரங்களை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்று ஆணையம் தெரிவித்தது.
இத்தகைய இணையத்தளங்கள் வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதைத் தடுக்க இந்த விதிமுறை நடப்பில் உள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
கடந்த ஆண்டுக்கான நிதி தனக்கு எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவலை தி ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளம் தெரிவிக்க தவறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
விதிமுறைக்கு உட்படாததை அடுத்து, தி ஆன்லைன் சிட்டி
சனின் உரிமம் கடந்த மாதம் 14ஆம் தேதியன்று இடைநீக்கம் செய்யப்பட்டது.
தகவல்களைச் சமர்ப்பிக்க கடந்த மாதம் 28ஆம் தேதி வரை அதற்குக் காலக்கெடு கொடுக்கப்பட்டது.

