ஜாலான் துக்காங் விடுதி ஊழியர்களில் 55% தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்

வெஸ்ட்­லைட் ஜாலான் துக்­காங் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் உள்­ள­வர்­களில் 55%க்குத் தடுப்­பூசி போடப்­பட்டுள்ளது.

அவர்­க­ளுக்குத் தடுப்­பூசி போடப்­பட்டு இருக்­கிறது என்­பதைச் சரி­பார்த்து அந்த விடுதி உறு­தி­செய்து இருக்­கிறது என்று நேற்று மனி­த­வள அமைச்சு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

எஞ்­சிய 45 விழுக்­காட்டு ஊழி­யர்­க­ளைப் பொறுத்­த­வரை, தடுப்­பூசி சரி­பார்ப்பு நடை­முறை இன்­ன­மும் முடி­யா­மல் இருக்­கிறது. அல்­லது அவர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கி­றார்­கள்.

ஊழி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­களா என்­பதைச் சரி­பார்க்­கும் நடை­முறை தொடர்­பில் முத­லா­ளி­க­ளு­டன் சேர்ந்து தொடர்ந்து செயல்­ப­டப்­போ­வ­தாக அமைச்சு குறிப்­பிட்டு உள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள தொடர்ந்து வாய்ப்பு அளிக்­கப்­படும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்டு உள்­ளது. தடுப்­பூசி போட்டுக்­கொள்­ளும்­படி தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­களை அது வலி­யு­றுத்தி இருக்­கிறது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உட்­பட வெளி­நா­டு­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருப்­ப­வர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­தும் அவர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­களா என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான சரி­பார்ப்பு நடை­முறை மேற்­கொள்­ளப்­படும்.

வெளி­நா­டு­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்­கான சான்­றி­தழ்­களை அவர்­கள் தாக்­கல் செய்­ய­வேண்­டும். சிங்­கப்­பூ­ரில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மருத்­துவ நிலை­யத்­தில் பரி­சோ­த­னைக்கு உட்­பட்டு அவர்­க­ளுக்குத் தொற்று இல்லை என்­ப­தும் தெரி­ய­வர வேண்­டும்.

ஒரு­வர், பைசர்-பயோ­என்­டெக்/கொமிர்­னாட்டி, மொடர்னா, உலக சுகா­தார நிறு­வ­னம் அவ­சர பய­னீட்­டுக்கு அங்­கீ­க­ரித்­துள்ள தடுப்­பூ­சி­களை முழு­மை­யாக போட்­டுக்­கொண்­ட­தற்கு இரண்டு வாரங்­கள் கழித்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வ­ராக வகைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தும் அவர்­களின் பெயர் தேசிய நோய்த் தடுப்­பாற்­றல் பதி­வேட்­டில் இடம்­பெ­றும்.

டிரேஸ்­டு­கெ­தர் செய­லி­யி­லும் இதைத் தெரிந்­து­கொள்­ள­லாம்.

இத­னி­டையே, வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் இருப்­போ­ருக்­கான சுகா­தாரப் பரா­ம­ரிப்பு நடை­மு­றை­களில் மாற்­றங்­கள் நடப்­புக்கு வந்­துள்­ளன.

விடு­தி­யி­லேயே தங்கிக் குண­மடை­யும் ஏற்­பாடு அந்த மாற்­றத்­தின் ஒரு பகு­தி­யாக அம­லாகி இருக்­கிறது.

அந்­தப் புதிய விதி­மு­றை­கள் ஊழியரின் வேலை மற்றும் வாழ்க்கைப் பாதிப்­பு­க­ளைக் குறைப்­பதை நோக்­க­மா­கக்கொண்­டது.

அவை விடு­தி­வா­சி­க­ளுக்கு வச­தி­யாக இருக்கிறது என்­றா­லும் சிறு­சிறு பிரச்­சி­னை­கள் எதிர்­நோக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­ய­வந்­துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!