பார்வை மங்கும் குறைபாடு உள்ளோர் உதவிக் கருவிகளைக் கடனாகப் பெற உதவும் நிலையம்

பார்வை மங்கும் குறைபாடு உள்ளோர் உதவிக் கருவிகளைக் கடனாகப் பெற உதவும் நிலையம்

2 mins read
a6e2f110-8b6f-4ac8-b380-06da461d6e0e
-

சிங்­கப்­பூர் தேசிய கண் நல நிலை­யத்­தில் சிகிச்சை பெறும் பார்வை மங்­கும் குறை­பாடு உள்­ள­வர்­கள், உத­விக் கரு­வி­களைக் கட்டணமில்லா கட­னாகப் பெறமுடி­யும்.

அவற்­றைப் பயன்­ப­டுத்­திய பிறகு அதை விலை­கொ­டுத்து வாங்­கிக்கொள்­ள­லாமா, வேண்­டாமா என்­பது பற்றி கண்­பார்வை குறை­பாடு உள்­ள­வர்­கள் முடிவுசெய்ய ஏது­வாக அந்த ஏற்­பாடு இடம்­பெ­று­கிறது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் தொழில்­நுட்­பம் அதி­க­ரித்து வரு­வ­தால் இத்­த­கைய கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வதற்­கான தேர்ச்­சி­களைக் கற்­றுக்­கொள்­ள­வும் அந்த ஏற்­பாடு உத­வு­கிறது.

சிங்­கப்­பூர் தேசிய கண் நல நிலையத்தின் பார்வை மங்­கும் குறை­பாடு உள்­ளோ­ருக்­கான சிகிச்சை நிலை­யத்­தில் ஆண்­டுக்கு சுமார் 800 பேர் சிகிச்சை பெறு­கி­றார்­கள்.

இத­னி­டையே, அந்­தக் கரு­வி­க­ளைக் கட­னா­கப் பெறு­வ­தற்­கான திட்ட தொடக்க நிகழ்ச்­சி­யில் பேசிய கண் நல நிலை­யத்­தின் மருத்­துவ இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் வோங் டியன் யின், எதிர்­கா­லத்­தில் மருத்­து­வர்­கள் மின்­னி­லக்­கத் தீர்­வு­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டிய தேவை அதி­க­ரிக்­கும் வாய்ப்பு உள்­ள­தைச் சுட்­டி­னார்.

அந்த நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட­ தொடர்பு தக­வல் அமைச்­சர் திரு­வாட்டி ஜோச­ஃபின் டியோ, சிறப்பு மருத்­துவ தேவை உள்­ள­வர்­கள் சுதந்­தி­ர­மான வாழ்வை மேற்­கொள்ள கருவி­க­ளைக் கட­னாக அளிக்­கும் தொழில்­நுட்­பம் வழிவகுக்­கும் என்றார்.

பார்வை மங்­கும் குறை­பாட்­டைச் சரி­செய்ய உத­வும் கருவிகளைக் கட­னா­கப் பெறும் நிலை­யத்­திற்கு 'அறி­வார்ந்த தொழில்­நுட்ப முது­மைக்­கால சுறு­சு­றுப்பு வள முகப்பு' என்று பெயர். அதில் தொடக்­க­மாக 16 கருவிகள் இருக்­கின்­றன. தேவை­யா­ன­வர்­கள் அவற்­றைக் கட­னா­கப் பெற­மு­டி­யும். வார்த்­தை­க­ளைப் படிக்க பயன்­படுத்­தப்­படும் கருவி, முக அடை­யா­ளக் கருவி, கணக்­கீட்­டுக் கரு­வி­கள் முத­லா­னவை அவற்­றில் அடங்­கும்.

கடன் கருவி நிலை­யம் மார்ச் மாதம் தொடங்­கப்­பட்­டது. அது முதல் 16 பேர் கரு­வி­க­ளைக் கட­னா­கப் பெற்றுள்ளனர். அவற்றை மூன்று வாரம் பயன்­படுத்­தி­விட்டு நல்ல நிலை­யில் குறிப்­பிட்ட காலத்­தில் திருப்பி ஒப்­ப­டைத்­தால் கட்­ட­ணமில்லை.