பாலர் கல்வித் தரத்தை உயர்த்த புதிய திட்டங்கள் அறிவிப்பு

சிங்­கப்­பூ­ரில் பாலர் கல்­வி­யின் தரத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கு­டன் சில புதிய திட்டங்கள் அறி­விக்­கப்­பட்டுள்­ளன. பாலர் கல்வி ஆசி­ரி­யர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பயிற்­சி­கள் மேம்­ப­டுத்­தப்­ப­டு­வது, இத்­துறை­யில் தொடர்ந்து வளர்ச்­சி­ய­டைய உதவ கூடு­தல் வாய்ப்­பு­கள் ஆகியவை அவற்­றில் அடங்­கும். மேலும், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்குக் கூடு­தல் ஆத­ர­வும் வழங்­கப்­படும். இத்­த­கைய குடும்­பங்­க­ளைச் சேர்ந்த சிறு­வர்­களை பாலர் கல்வி மேற்­கொள்ள வைப்­ப­தும் அவர்­களை அடிக்­கடி வகுப்­பு­க­ளுக்­குப் போக ஊக்­கு­விப்­ப­தும் இலக்கு.

பாலர் கல்வி தொடர்­பில் நேற்று நடை­பெற்ற மாநாட்­டில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர்   அனு­கூலங்­களை அறி­வித்­தார். பாலர் கல்­விக்­கான திறன் கட்­ட­மைப்­பை­யும் திரு மசகோஸ் வெளி­யிட்­டார். 2016ஆம் ஆண்­டில் இதற்கு முன் அறி­விக்­கப்­பட்ட இந்­தக் கட்­ட­மைப்பு மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட்­டது. பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு கட்­ட­மைப்பை மறு­ப­ரி­சீ­லனை செய்­தது.

பாலர் கல்­வித் துறை­யில் இருக்­கும் பல வேலை வாய்ப்­பு­க­ளுக்­குத் தேவை­யான திறன்­க­ளை­யும் தொழில் பாதை­க­ளை­யும் புதிய கட்­ட­மைப்பு விவ­ரிக்­கிறது. குறிப்­பாக இரண்டு மாதத்­தி­லி­ருந்து நான்கு வய­தா­கும் சிறு­வர்­களுக்கான பாலர் கல்­வி­யின் தொடர்­பில் ஆசி­ரி­யர்­க­ளின் வளர்ச்­சிக்கு வழி­வ­குக்­கக்­கூ­டிய வாய்ப்பு­களை எடுத்­துக்­காட்ட பாலர் கல்வி தொழில் பாதை­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இது, இளம் பாலர் கல்வி மாணவர்­க­ளைக் கவ­னிக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு இருக்­கும் தொழில் வளர்ச்சி வாய்ப்­பு­களை தெளி­வு­படுத்­து­கிறது. மேலும், ஆசி­ரி­யர்­கள் அடைய விரும்­பக்­கூ­டிய புதிய தலை­மைத்­து­வப் பொறுப்­பு­கள் குறித்­தும் தெரிய வருகிறது என்­றார் திரு மச­கோஸ்.

வரும் டிசம்­பர் மாதம் முதல் 'கிட்ஸ்­டார்ட்' திட்­டத்­தில் இடம்­பெறும் குடும்­பங்­க­ளின் பிள்ளை மேம்­பாட்­டுக் கணக்­கு­களில் ஆண்டு­தோ­றும் ஒரு தொகை சேர்க்­கப்­படும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார். தங்­கள் பிள்­ளை­க­ளின் ஆரம்பகால வளர்ச்­சியை ஊக்­கு­விக்க பெற்­றோ­ருக்­குத் தேவையான திறன்­க­ளை­யும் தக­வல்­க­ளை­யும் வழங்­கு­வது 'கிட்ஸ்­டார்ட்' திட்­டத்­தின் நோக்­கம். திட்­டத்­தில் இது­வரை 2,000க்கும் அதி­க­மான சிறுவர்­கள் இடம்பெற்றுள்ளனர். இதன்­படி பாலர் பள்­ளி­யில் சேரும் நான்கு வய­துக்­குக்கீழ் உள்ள சிறுவர்­கள் சேர்ந்த முதல் ஆண்­டில் 200 வெள்­ளி­யைப் பெறு­வர். அதற்­குப் பிறகு ஆறு வயது ஆகும் வரை அவர்­கள் ஆண்டுதோறும் 100 வெள்­ளி­யைப் பெறு­வர். நான்கு வய­தைத் தாண்­டிய பிறகு பாலர் பள்­ளி­யில் சேரும் பிள்­ளை­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் 100 வெள்­ளி­ வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!