16 வீவக திட்டங்கள் விருதுக்குத் தகுதி

2 mins read
76ee9065-91e3-4202-a7e2-9aceb71cd113
ஸ்கைபார்க்@டாசன் திட்டத்தின் கட்டட வளாகங்களில் சிறுசிறு பறவைகளுக்கும் இடமுண்டு. படம்: டிசைன் லிங்க் ஆர்கிடெக்ட்ஸ் -

உன்னத வடிவமைப்பு, பொறியியல் அம்சங்கள் மற்றும் கட்டுமானச் சிறப்பு ஆகியவற்றுக்காக 16 வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் திட்டங்கள் வீவக விருதுகளுக்கு அங்கீ

கரிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அங்கீகாரம் பெற்ற திட்டங்களில் ஒன்று ஸ்கைபார்க்@டாசன். குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வீடமைப்புக் கட்டடங்கள் கடந்த டிசம்பர் மாதம் இத்திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்டன.

உள்ளூரில் வளர்ந்து வரும் வடிவமைப்பு நிறுவனமான டிசைன் லிங்க் ஆர்கிடெக்ட்ஸ் இந்தத் திட்டத்தில் இடம்பெற்ற கட்டடங்

களுக்கு வடிவமைத்தது.

மொத்தம் மூன்று புளோக்குகளில் 810 வீடுகள் கட்டப்பட்டன. ஈரறை ஃபிளக்ஸி, மூவரை, நான்கறை மற்றும் ஐந்தறை வீடுகள் இவற்றில் இடம்பெற்று உள்ளன.

தங்ளின் வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மறுசீரமைப்புத் திட்ட மாற்றுத் தளங்களில் ஸ்கைபார்க்@டாசன் திட்டமும் ஒன்று.

இதன் கட்டடங்களின் தரைத்

தளத்தில் 200 மீட்டர் நீள சமூக சூற்றுச்சூழல் தாழ்வாரம் அமைந்துள்ளது. நிழல் தரக்கூடிய 18 மரங்கள் உள்ளிட்ட இயற்கை அம்சங்களுடன் இவற்றின் வளாகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறுசிறு பறவைகளும் தேனீக்களும் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து அழகு சேர்க்கின்றன. பசுமை உள்கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டதுடன் மழைநீர் சேமிப்பு அம்சமும் இங்கு புகுத்தப்பட்டுள்ளது. புளோக்குகளின் உச்சியில் வான்தோட்டங்கள் அமைந்துள்ளன. ஒட்டுமொத்த மாக பூங்காவுக்குள் குடியிருக்கும் வசதியை இந்த வடி

வமைப்புகள் தரும்.

அங்கீகரிக்கப்பட்ட 16 திட்டங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு வரும் புதன்கிழமை (அக்டோபர் 20) தோ பாயோவில் உள்ள வீவக மையத்தில் நடைபெறும்.

வீடமைப்புத் திட்டங்களின் மேம்பாட்டில் உன்னத கட்டுமானத்தைப் புகுத்திய ஆறு கட்டுமானக் குத்தகை நிறுவனங்களும் இவ்வாண்டு அங்கீ கரிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று பிஎச்சிசி கன்ஸ்ட்ரக்‌ஷன். 43 மாடி 'ஃபோர்ஃபார் ஹைட்ஸ்' கட்டடத்தைக் கட்டு வதில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களைக் கடந்து வெற்றி கண்டுள்ளது இந்நிறுவனம்.

அலெக்ஸாண்ட்ரா ரோடு-காமன்வெல்த் அவென்யூ சந்திப்பிலுள்ள இக்கட்டடம் குடியிருப்புக்கும் வர்த்தகத்திற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உன்னத வடிவமைப்பு, இயற்கை எழில் நிறைந்த அம்சங்கள்