ஜூரோங் விடுதியிலுள்ள 1,400 செம்ப்மரின் ஊழியர்களும் தடுப்பூசி போட்டதாகத் தகவல்

வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியிலுள்ள தனது 1,400 ஊழியர்களும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாக செம்ப் கார்ப் மரின் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அவர்களில் 43 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரம் தேசிய நோய்த்தடுப்புப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

3,420 படுக்கை வசதிகளுடன் ஜூரோங்கில் அமைந்துள்ள அவ்விடுதியில் இப்போது 2,800 பேர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், அவ்விடுதியில் தங்கியிருக்கும் தனது 1,400 ஊழியர்களும் சிங்கப்பூருக்கு வருமுன் தங்களது நாடுகளிலேயே தடுப்பூசி போட்டுவிட்டதாக செம்ப்மரின் நிறுவனம் தெரிவித்தது.

"துக்காங் விடுதியில் வசிக்கும் எங்கள் ஊழியர்கள் அனைவரும் அண்மையில் சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதைச் சரிபார்த்து வருகிறோம்," என்று அந்நிறுவனம் கூறியது.

கடந்த புதன்கிழமை அவ்விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் விடுதி நிர்வாகத்தினர்க்கும் இடையே மோதல் எழுந்ததை அடுத்து, கலவரத் தடுப்பு போலிசார் அழைக்கப்பட்டனர்.

சுகாதாரமும் உணவும் மோசமாக இருப்பதாகவும் கொவிட்-19 தொற்றிய ஊழியர்களை மீட்பு, சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் நீண்ட தாமதமும் ஏற்படுவதாக ஊழியர்கள் புகார் கூறினர்.

அவ்விடுதியில் கிட்டத்தட்ட 500 பேரைக் கிருமி தொற்றிவிட்டதை அடுத்து இச்சம்பவம் நிகழ்ந்தது.

இந்நிலையில், சிங்கப்பூரின் தடுப்பூசிப் பதிவுச் செயல்முறை குறித்தும் பொதுச் சுகாதார நெறிமுறைகள் குறித்தும் ஊழியர்களிடம் விளக்கி வருவதாக செம்ப்மரின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது ஊழியரணியின் சுகாதாரம், பாதுகாப்பு, வசிப்பிடச் சூழலைப் பேணி உறுதிசெய்வதில் முழுக் கடப்பாட்டுடன் இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியது.

இதனிடையே, குறித்த காலத்தில் தம் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா என்பதை நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு நினைவூட்டியுள்ளது.

"இம்மாதம் 16ஆம் தேதிவரை, வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் விடுதிவாசிகளில் 55 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டது சரிபார்க்கப்பட்டுவிட்டது அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டனர்," என்றும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!