நேரடி பள்ளிச் சேர்க்கை மூலம் உயர்நிலைப் பள்ளிகளுக்கு அதிகம் பேர் விண்ணப்பம்

அதிகமான தொடக்கநிலை 6 மாணவர்கள் இவ்வாண்டு நேரடி பள்ளிச் சேர்க்கை மூலம் உயர்

நிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

புதிய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறை தாங்கள் விரும்பிய பள்ளியில் சேருவதை எவ்வாறு பாதிக்கும் என்ற குழப்பம் நிலவிய வேளையில் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

சுமார் 12,100 மாணவர்கள் விளையாட்டு, இணைப்பாட நட

வடிக்கைகள் அல்லது சிறப்புக் கல்விப் பிரிவுகளில் பெற்ற திறன்

களின் அடிப்படையில் தாங்கள் விரும்பும் பள்ளியில் சேர இந்த நேரடிச் சேர்க்கை முறையைத் தெரிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு இவ்வாறு விண்ணப்பித்த 11,900 மாணவர்களில் 3,600 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த முறையின்கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப காலம் ஜூன் 1ஆம் தேதி நிறைவுபெற்றது. இவ்வாண்டு பெறப்பட்ட 31,400 விண்ணப்பங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். ஏறக்

குறைய 30,500 விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு பெறப்பட்டன.

அதேபோல, ஒருங்கிணைந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள பள்ளி கள் மற்றும் வழக்கமான உயர்

நிலைப் பள்ளிகளும் இந்த நேரடி பள்ளிச் சேர்க்கை வழி கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன.

இவ்வாண்டு அறிமுகம் கண்ட பிஎஸ்எல்இயின் சாதனை மட்டத்திலான மதிப்பீட்டு முறை குறித்து கவலையுற்றிருந்த பெற்றோர்களில் கிறிஸ்டினா லோவும் ஒருவர். தலைசிறந்த பள்ளிகளில் சேர்வது தங்களது குழந்தைக்குக் கடினமாக இருக்குமோ என்பது பெற்றோர்

களின் கவலையாக இருந்தது.

நேரடி பள்ளிச் சேர்க்கை முறை எனது மகள் விரும்பிய பள்ளியில் சேருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று கூறினார் உடற்குறை உள்ளோர் இல்ல மேற்பார்வையாளரான திருவாட்டி லோ, 45. கேய்லா ஹூ, 12, எனப்படும் தமது மகள் நேரடி பள்ளிச் சேர்க்கை மூலம் மூன்று உயர்நிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பித்ததாகவும் அவற்றில் இரு பள்ளிகளிலிருந்து உறுதியான அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, நேரடி பள்ளிச் சேர்க்கை மூலம் இந்த ஆண்டு மிதமிஞ்சிய விண்ணப்பங்கள் வரப்பெற்றதாக ராஃபிள்ஸ் கல்வி நிலையம் தெரிவித்துள்ளது.

தனது உயர்நிலை 1 இடங்களில் 30 விழுக்காட்டுக்கு இந்த முறை வாயிலாக விண்ணப்பங்கள் வருவது வழக்கம் என்றும் இந்த ஆண்டு அதனைக் கடந்து அதிக விண்ணப்பங்கள் வந்து குவிந்த தாகவும் அந்த கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் ஃபிரடெரிக் இயோ ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!