கிருமித்தொற்று இருப்பதாகத் தவறான தகவலை தரக்கூடியது என்ற காரணத்தால் மீட்கப்பட்ட அபட் அலினிட்டி (Abbott Alinity) கொவிட்-19 பரிசோதனைக் கருவிகள், மருத்துவ ஆய்வுக்கூடப் பயன்பாட்டுக்காக சிங்கப்பூருக்குத் தரப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று கூறியது.
இக்கருவிகள் தவறான தொற்று சோதனை முடிவைத் தருவதாக கடந்த மாதம் மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தவற்றைச் சீர்செய்ய பொருத்தமான நடவடிக்கை எடுப்பது குறித்து அபட் நிறுவனத்துடன் தான் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் ஆணையம் தெரிவித்தது. ஆயினும், இது
குறித்து வேறெந்தத் தகவலையும் அது விவரிக்கவில்லை.
அபட் லெபாரட்டரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அபட் மோல்குலர் தயாரித்த இரு கொவிட்-19 பரிசோதனைக் கருவி கள் கிருமி தொற்றியது தொடர் பாக தவறான தகவலை அளித்ததால் அவை மீட்கப்பட்டதாக அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத் துறை கடந்த வியாழக்கிழமை தெரிவித்து இருந்தது. அவ்வாறு மீட்கப்பட்ட கருவிகளுள் ஒன்று Abbott Alinity m SARS-CoV-2 AMP Kit. இந்தப் பரிசோதனைக் கருவிக்கான தற்காலிக அனுமதியை கடந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சுகாதார அறிவியல் ஆணையம் வழங்கி இருந்தது.

