தாமதத்திற்குப் பின் பொங்கோல் எல்ஆர்டி ரயில் சேவை மீண்டது

தாமதத்திற்குப் பின் பொங்கோல் எல்ஆர்டி ரயில் சேவை மீண்டது

2 mins read
6d690bec-0944-4556-8c94-176ca8129c6e
-
Google News Preferred Icon

சமிக்ஞை கோளாறு காரணமாக பொங்கோல் எல்ஆர்டி ரயில் சேவையில் நேற்று பகலில் 45 நிமிட தாமதம் ஏற்பட்டது.

சேவை தடைபட்டிருந்தது குறித்த முதல் அறிவிப்பை எல்ஆர்டி ரயில் சேவை நடத்துநரான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் பிற்பகல் 12.02 மணிக்கு தமது டுவிட்டரில் வெளியிட்டது.

தொடர்ந்து, சேவை வழக்க

நிலைக்குத் திரும்பியதாக 12.14 மணிக்கு அதன் மற்றொரு பதிவு தெரிவித்தது.

சேவைத் தடங்கல் நீங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயணி

களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலவசப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாக 12.25 மணிக்கு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் கூறியது.

சிரமம் ஏற்பட்டதற்காக அனைத்துப் பயணிகளிடமும் அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

சமிக்ஞை கோளாறு காரணமாக ஐந்து எல்ஆர்டி ரயில்கள் தண்டவாளத்திலேயே நிறுத்தி வைக்கப்படவேண்டி இருந்ததாக எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத் தொடர்புப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் திருவாட்டி டேமி டான் குறிப்பிட்டார்.

மின்னல் வெட்டுவது குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் இருந்து தண்டவாளம் வழியாக பயணிகளை உடனடியாக மீட்க இயலவில்லை என்று நிலை மையை அவர் விவரித்தார்.

இருப்பினும், அந்த ரயில்

களுக்குள் விளக்குகளும் குளிரூட்டிகளும் தொடர்ந்து இயங்கியதாகவும் எஸ்பிஎஸ் டிரான்ஸிட் பணியாளர்கள் அந்த ரயில்களின் பயணிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் திருவாட்டி டான் கூறினார்.

கோளாற்றுக்கான காரணத்தை அறிய புலன்விசாரணை நடைபெறு கிறது.

சேவைத் தடங்கல் காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் ஊடகங்களிடம் பேசினர்.

அவர்களில் ஒருவரான டையந்தா சோங், 24, என்னும் பெண்மணி கட்டுடல் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது ரயில் நின்றுவிட்டதாகக் கூறினார்.

"வழக்கமாக நான் பொங்கோல் எம்ஆர்டி நிலையத்தை பத்து நிமிடங்களுக்குள் அடைந்துவிடுவேன். ரயில் நின்ற நேரத்தில் 15 நிமிட தாமதம் இருக்கும் என்று சொன்னார்கள்.

"ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எல்ஆர்டி ரயிலுக்குள்ளேயே நான் முடங்கிக் கிடக்க வேண்டியதாவிட்டது. அதனால் கட்டுடல் பயிற்சி வகுப்புக்குச் செல்ல இயலவில்லை.

"சேவைத் தடங்கல் குறித்த தெளிவான அறிவிப்புகள் இல்லாததால் எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. தவறவிட்டாலும் கலந்துகொள்ள வேண்டிய வகுப்புக்கு நான் கட்டணம் செலுத்த வேண்டும்," என்றார் அவர்.