செய்திக்கொத்து

ஒன்பது பேர் மரணம்; புதிதாக

3,348 தொற்றுச் சம்பவங்கள்

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு மேலும் ஒன்பது பேர் மாண்டு விட்டனர். அவர்களையும் சேர்த்து கிருமித்தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 224க்கு உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மாண்டவர்களில் நால்வர் ஆண்கள், ஐவர் பெண்கள். அவர்கள் 60 வயதுக்கும் 89 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள். இவர்களில் இருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இருவர் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், ஐவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் மருத்துவ பிரச்சினைகள் இருந்தன.

ஏற்கெனவே இருந்த மருத்துவ பிரச்சினைகளால் கொவிட்-19 தொற்று மேலும் மோசமாகி கடந்த 28 நாட்களில் மரணமுற்றவர்களில் 26.3 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். மற்றவர்கள் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். தொடர்ந்து 27வது நாளாக நேற்று முன்தினம் மரணச் சம்பவங்கள் நிகழ்ந்தன. நேற்று முன்

தினம் மட்டும் மொத்தம் 3,338 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவற்றில் 2,688 சமூகத்தில் உருவான புதிய தொற்றுகள். வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 656 பேருக்குக் கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் நால்வரிடம் கிருமித்தொற்று இருந்தது. உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களில் 475 பேர் 60 வயதைத் தாண்டியவர்கள்.சுகாதார அமைச்சு கண்காணித்து வரும் பெரிய கிருமித்தொற்றுக் குழுமங்களில் இரண்டில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் தோன்றியுள்ளன.

நேற்று முன்தினம் வரை சிங்கப்பூரில் மொத்தம் 145,120 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மக்கள் தொகையில் 84 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 85 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

மொத்தம் 554,004 பேர் தங்கள் 'பூஸ்டர்' தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் 100,000 பேர் 'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சினோக்கோ மின்ஆலைக்கு

படையெடுத்த பூனைகள்

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக செம்பவாங்கில் பல தொழிற்சாலைகளும் சரக்குக் கிடங்குகளும் மூடப்பட்டுவிட்ட தால், அந்த இடங்களில் தஞ்சமடைந்திருந்த சுமார் 30 பூனைகள் இப்போது அந்தப் பகுதியில் உள்ள சினோக்கோ மின்ஆலைக்குப் படையெடுத்துள்ளன. கருத்தடை செய்யப் படாத பூனைகள் இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சுற்றித் திரிவதால், அதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தாலும் கருத்தடை செய்யப்பட்ட பூனைகளுடன் புதிதாக வந்த பூனைகள் சண்டை போட்டுக்கொள்கின்றன என்பதாலும் இந்தப் பூனைகள் பற்றிய அக்கறைகள் அதிகரித்துள்ளன.

"இந்த ஆலையின் பகுதியில் ஏற்கெனவே இருந்த பத்து பூனைகளுக்கு நானும் இங்குள்ள மற்ற ஊழியர்களும் உணவளித்து வருகிறோம். பக்கத்திலுள்ள உணவு பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதால் அங்குள்ள மற்ற தெரு பூனைகள் இப்போது எங்கள் ஆலைக்குள் வந்து விட்டன," என்று சினோக்கோ எனர்ஜி நிறுவனத்தின் சட்டம் மற்றும் இணக்கப் பிரிவின் மூத்த உதவித் தலைவர் சின்டி லிம் தெரிவித்தார். தொழில்பேட்டைகளில் உள்ள பூனை களுக்குக் கருத்தடை செய்யாவிட்டால் அது விரைவில் இனப்பெருக்கம் செய்துவிடும். பின்னர் அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க தொழிற்சாலைகள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றார் பூனைகள் நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் திருவாட்டி தேனுகா விஜயகுமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!