பணிப்பெண்ணைச் சீரழிக்க முயன்ற முதியவர்க்கு 12½ ஆண்டு சிறை

இந்தோனீசிய பணிப்பெண் ஒருவர் தமது வீட்டில் வேலை செய்யத் தொடங்கி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 68 வயது ஆடவர்க்கு 12½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த முதியவர்க்கு விறைப்புத்தன்மைக் குறைபாடு இருப்பதாகக் கூறப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அப்பெண்ணிடம் அத்துமீற முயன்றதை அந்த ஆடவர் ஒத்துக்கொண்டார். அப்போது அந்தப் பணிப்பெண்ணுக்கு 25 வயது.

அந்த ஆடவர்க்கு வேலையில்லை. அவரின் மனைவி வாரம் ஆறு நாள்கள் வேலைக்குச் சென்றுவிடுவார்.

2019 ஜூன் 7ஆம் தேதி காலையில் குளித்துவிட்டு, அந்தப் பணிப்பெண் தமது அறைக்குள் சென்றார். இதைக் கண்ட அந்த ஆடவர், முன்னதாக தாம் வாங்கி வைத்திருந்த ஆணுறையை எடுத்துக்கொண்டு, அந்தப் பெண்ணின் அறைக்கதவைத் தட்டினார்.

கதவைத் திறந்த அப்பெண், அவருக்கு ஏதோ அவசரமாகத் தேவைப்படுகிறதுபோல என்று நினைத்தார்.

அறைக்குள் நுழைந்ததும், அப்பெண்ணிடம் இருந்து நல்ல வாசனை வருகிறது எனக் கூறி, அவரைக் கட்டியணைத்தார் அம்முதியவர்.

அப்பெண் தடுக்க முயன்றபோதும் அவரைப் பாயின்மேல் தள்ளிவிட்டு, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார் அந்த ஆடவர். ஆனால், அவரால் முடியாமல் போகவே மற்ற சேட்டைகளில் ஈடுபட்டார்.

ஒருவாறாக அவரிடம் இருந்து தம்மை விடுவித்த அப்பெண், கழிவறைக்குள் புகுந்து ஒளிந்துகொண்டார். அந்த ஆடவர் தமது அறையைவிட்டு வெளியேறும்வரை அவர் கழிவறையைவிட்டு வெளியே வரவில்லை.

தாய்நாட்டில் உள்ள குடும்பத்திற்குத் தமது ஆதரவு தேவை என்பதால் அப்போது அவர் அமைதியாக இருந்துவிட்டார்.

அன்றைய நாள் இரவு தமது அறையைப் பூட்டிக்கொண்டு அவர் உறங்கினார். ஆனாலும், மாற்றுச் சாவிகொண்டு அறையைத் திறந்த அம்முதியவர், மீண்டும் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்பட்டது.

அம்முதியவரின் மனைவி தம்மிடம் கனிவாக நடந்துகொண்டதால் காவல்துறையிடம் புகாரளிக்க அப்பெண் தயங்கினார்.

2019 ஜூலை 1ஆம் தேதியன்று அப்பெண் தமது அறையில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தபோதும் அவரிடம் அத்துமீற முயன்றார்.

எப்படியோ தமது கைபேசியை எடுத்து, அவரது அத்துமீறலைப் படம்பிடித்தார் அப்பெண்.

அதன்பின் அதே நாள் பிற்பகலிலும் அம்முதியவர் அவரிடம் முறையின்றி நடந்துகொண்டார்.

இதனையடுத்து, சக பணிப்பெண் ஒருவர் முன்னர் கூறிய ஆலோசனையின்படி, இல்லப் பணிப்பெண்கள் மையத்தைத் தொடர்புகொண்டு உதவி கோரிய அவர், சான்றாக தாம் பதிவுசெய்த காணொளியையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, காவல்துறை அழைக்கப்பட்டு, அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!