அறைகளை நிரப்ப கட்டுமான ஊழியர்கள், மலேசியர்களை நாடும் சிறிய ஹோட்டல்கள்

அறைகளை நிரப்ப கட்டுமான ஊழியர்கள், மலேசியர்களை நாடும் சிறிய ஹோட்டல்கள்

1 mins read
e5f74283-904e-4385-babe-77846b457531
லிட்டில் இந்தியாவில் 'பார்க் 22' ஹோட்டலில் உள்ள ஓர் அறை. படம்: பார்க் 22 ஹோட்டல் -

கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொழுதுபோக்குப் பயணங்கள் முடங்கிப்போனதால், இங்குள்ள சிறிய ஹோட்டல்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இருப்பினும், அவை முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.

ஹோட்டல் அறைகளை நிரப்ப புதிய வாடிக்கையாளர் பிரிவினரை அவை நாடுகின்றன. கட்டுமான ஊழியர்கள், இங்கு வசிக்கும் மலேசியர்கள் அல்லது சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து இங்கு தங்க தற்காலிகமாக இடம் தேவையுடையோர் உள்ளிட்டோர் வாடிக்கையாளர்களில் அடங்குவர்.

கடந்த ஆண்டு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் கொவிட்-19 வேகமாகப் பரவியபோது, கட்டுமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாற்று தங்குமிடங்களைத் தேடினர்.

அந்த நிறுவனங்களுக்கு 'ரெட் டோர்ஸ்' நிறுவனம் தனது ஹோட்டல்களைச் சந்தைப்படுத்தியது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை, அதன் ஹோட்டல் விருந்தினர்களில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் வெளிநாட்டு ஊழியர்கள்.

கொவிட்-19 சூழல் மேம்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அத்தகைய ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்குவிடுதிகளுக்குத் திரும்பினர்.

குறிப்புச் சொற்கள்