பணிப்பெண்ணைச் சீரழிக்க முயன்றவருக்குச் சிறை

பணிப்பெண்ணைச் சீரழிக்க முயன்றவருக்குச் சிறை

1 mins read
766a8406-9bd9-4708-b4c2-7fe4e5a3efdc
-

பணிப்­பெண்­ணைச் சீர­ழிக்க முயன்ற 68 வயது ஆட­வ­ருக்கு 12 ஆண்­டு­கள் ஆறு மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பணிப்­பெண்­ணைத் தாக்­கிய அந்த ஆட­வ­ருக்கு ஆண்­மைக் குறை­பாடு இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த ஆட­வ­ரின் குடும்­பத்­துக்­கா­கப் பணி­பு­ரிய அப்­ப­ணிப்­பெண் தொடங்கி ஒரு மாதத்­துக்­குள் அவ­ரைப் பாலி­யல் ரீதி­யா­கத் தாக்க அவர் முயன்­றார்.

தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை அந்த ஆட­வர் ஒப்­புக்­கொண்­டார்.

2019ஆம் ஆண்­டில் அந்­தக் குற்­றம் நிகழ்ந்­த­போது பாதிக்­கப்­பட்ட இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண்­ணுக்கு 25 வயது.

குற்­றம் புரிந்த ஆட­வ­ருக்கு 50 வய­துக்­கும் மேலா­கி­விட்­ட­தால் அவ­ருக்­குப் பிரம்­படி விதிக்க முடி­யாது.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தில் இன்­னொரு பணிப்­பெண்­ணின் உதவியை பாதிக்­கப்­பட்ட பெண் நாடி­னார். பணிப்­பெண்­க­ளுக்­கான மையத்­துக்­கான தொடர்பு எண் அவ­ரி­டம் கொடுக்­கப்­பட்­டது. ஆனால் புகார் செய்ய அப்­பெண் தயங்­கி­னார்.

ஆனால் அவர் மீண்­டும் பாலி­யல் ரீதி­யா­கத் தாக்­கப்­பட்­ட­தை அடுத்து, அவர் உதவி நாடி­னார். அந்த ஆட­வ­ரைப் போலி­சார் கைது செய்­த­னர்.