சிங்கப்பூர் நிறுவனமான டேட்டா சென்டர் ஃபெர்ஸ்ட், இந்தோனீ
சியாவின் பாத்தாம் தீவில் முதல்முறையாக தரவு மையம் ஒன்றைத் திறக்க இருக்கிறது.
சிங்கப்பூருக்கும் பாத்தாமுக்கும் இடையே தொடர்பையும் மின்னிலக்க இணைப்புகளையும் பலப்
படுத்த புதிய தரவு மையம் திறக்கப்படுவதாக நிறுவனம் கூறியது. புதிய தரவு மையம், பாத்தாமில் உள்ள நொங்சா மின்னிலக்கப் பூங்காவில் அமைந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தரவு மையத்துக்கு நொங்சா ஒன் என்று பெயரிடப் பட்டுள்ளது. அது 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

