அரசாங்கத்தின் '5ஜி' முன்னோட்டங்கள் ஆரம்பம்

அரசாங்கத்தின் '5ஜி' முன்னோட்டங்கள் ஆரம்பம்

2 mins read
fd1ceff8-e197-43fc-8714-01a1ae369e2f
-

சிங்­கப்­பூ­ரின் செந்­தோசா பகு­தி­யில் '5ஜி' தொடர்­பான பொதுத் துறை முன்­னோட்­டத் திட்­டங்­கள் தொடங்கி­விட்­டன. '5ஜி@செந்­தோசா' குறித்து தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று தெரி­வித்­தார்.

ஓட்­டு­ந­ரில்­லாத சாலைத் துப்­புரவு வாக­னங்­களை வேறு இடத்­தில் இருந்­த­வாறு ஒரு­வர் இயக்­கு­வது, பொருட்­களை வாடிக்­கை­யாளர்­கள் வாங்­கு­வ­தற்­கான மின்­னி­லக்க அறி­விப்­புப் பல­கை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது போன்ற '5ஜி' கைபே­சிக் கட்­ட­மைப்­பு­கள் சார்ந்த சில புதிய செய­லி­கள் மூலம் அர­சாங்­கம் சோத­னை­யி­டு­கிறது.

அர­சாங்­கத் தொழில்­நுட்ப அமைப்பு (கவ்­டெக்), செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கம், சிங்­டெல் ஆகி­ய­வற்­றின் கூட்டு முயற்­சி­யில் இத்­திட்­டம் அமல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

அறி­வார்ந்த தேசம் தொடர்­பான வெவ்­வேறு செய­லி­க­ளின் '5ஜி' ஆற்­றல்­களை அர­சாங்க அமைப்பு­கள் கண்­கா­ணித்து, அவற்றை அடுத்த ஐந்து ஆண்­டு­களில் படிப்­படி­யாக சிங்­கப்­பூர் முழு­வ­தும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதே இந்த முன்­னோட்­டத் திட்­டத்­தின் நோக்­க­மாகும்.

மனி­த­வ­ளத்தை மிச்­சப்­ப­டுத்­து­வது, வேலை­யி­டத்­தில் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வது, மேலும் எளி­தான முறை­யில் சேவை­களை மக்­க­ளிடத்­தில் சேர்ப்­பது போன்­ற­வற்­றின் தொடர்­பில் சில செய­லி­கள் அமை­ய­லாம்.

'4ஜி' கட்­ட­மைப்­பைக் காட்­டி­லும் 10 மடங்கு விரை­வா­க­வும் கூடு­தல் அலை­வ­ரிசை கொண்­ட­தா­க­வும் '5ஜி' கட்­ட­மைப்பு விளங்­கு­கிறது. கூடு­தல் அலை­வ­ரிசை கட்­ட­மைப்­பு­டன் மேலும் அதி­க­மான சாத­னங்­கள் இணைந்­து­கொள்­ள­லாம்.

தற்­போது 10 முன்­னோட்­டத் திட்­டங்­கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இவற்­றில் பெரும்­பாலானவை ஆகஸ்ட் மாதத்­தில் தொடங்­கப்­பட்­டன.

பொதுத் துறை அமைப்­பு­க­ளின் 15 முன்­னோட்­டத் திட்­டங்­களை இவ்­வாண்டு இறு­திக்­குள் நடை­முறைப்­ப­டுத்­தும் இலக்கை அர­சாங்­கம் கொண்­டுள்­ளது. 2023ஆம் ஆண்­டின் முதற்­பா­திக்­குள் குறைந்­தது 30 முன்­னோட்­டத் திட்­டங்­களை அமல்­ப­டுத்­த­வும் அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது.

செந்­தோசா முன்­னோட்­டத் திட்­டங்­க­ளுக்­குத் துணை­பு­ரி­யக்­கூ­டிய '5ஜி' தீர்­வு­களை அர­சாங்க அமைப்பு­க­ளுக்கு வழங்­கும் நிலை­யில் உள்ள நிறு­வ­னங்­களை அடை­யா­ளங்­காண, சிங்­டெல் நிறு­வ­னத்­து­டன் தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் இணைந்து செயல்­படும்.

தொலைத்­தொ­டர்பு செயல்­பாடு­களுக்கு '5ஜி' கட்­ட­மைப்பே ஏது­வா­னது என்று கூறப்­பட்­டது. 2025ஆம் ஆண்­டுக்­குள் நாடு முழு­வ­தும் '5ஜி' கட்­ட­மைப்பு இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே முன்­னோட்­டத் திட்­டங்­கள் தொடர்­பில் பாது­காப்பு நடை­மு­றை­களும் நடப்­பில் இருக்­கும் என்று கூறப்­பட்­டது.

செந்­தோசா முன்­னோட்­டத் திட்­டங்­கள் அனைத்­தும் வார­இ­றுதி நாட்­கள், வரு­கை­யா­ளர்­கள் அதி­க­மாக இருக்­கும் உச்ச நேரங்­களில் நடை­பெ­றாது என்று தெரி­விக்­கப்­பட்­டது.