'கொவிட்-19 தடுப்பூசியை மேலும் அதிக புற்றுநோயாளிகள் நாடுகின்றனர்'

'கொவிட்-19 தடுப்பூசியை மேலும் அதிக புற்றுநோயாளிகள் நாடுகின்றனர்'

1 mins read
ca64b0d5-d629-4f92-a071-4d859ec573ca
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசியை மேலும் அதி­க­மான புற்­று­நோ­யா­ளி­கள் நாடு­வ­தாக சிங்­கப்­பூர் தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யம் (என்­சி­சி­எஸ்) தெரி­வித்துள்­ளது.

நிலை­யத்­தின் கீழ் ஏறத்­தாழ 8,500 புற்­று­நோ­யா­ளி­கள் புற்­று­நோய் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். அவர்­களில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் 68 விழுக்­காட்­டி­னர், முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டோர் 8 விழுக்­காட்­டி­னர் மற்­றும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் 24 விழுக்­காட்­டி­னர் என்று கூறப்­பட்­டது.

கொவிட்-19 தொற்­றால் உடல் உறுப்பு செய­லி­ழத்­தல், 'நிமோ­னியா', உயி­ரி­ழப்பு போன்ற கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­படும் அபா­யத்­தைத் தடுப்­பூசி குறைக்­கும். தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகு­தி­பெ­று­வோர், முடிந்­த­வரை விரைந்து தங்­க­ளது தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­ளு­மாறு என்­சி­எஸ்­எஸ் மருத்­து­வர்­களும் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

புற்­று­நோ­யா­ளி­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பில் எழக்­கூ­டிய கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளிக்­கும் வகை­யில் இல­வச இணை­யக் கருத்­த­ரங்கு ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று பிற்­ப­கல் 2 மணிக்­குக் கருத்­த­ரங்கு தொடங்­கும். கருத்­த­ரங்கு தொடர்­பில் மேல்­வி­வ­ரம் அறி­ய­வும் பதிந்­து­கொள்­ள­வும் https://us06web.zoom.us/webinar/register/WN_fhomWWSOSrKu2L-e9tY7Vg இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.