செய்திக்கொத்து

1 mins read
da606d45-2d26-4fcf-b41d-bbdd0df7d84a
-

விரிவுபடுத்தப்பட்ட 'விடிஎல்': முதல்

விமானம் இன்று தரையிறங்குகிறது

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள், தனிமை உத்தரவின்றி பயணம் செய்யும் விரிவுபடுத்தப்பட்ட 'விடிஎல்' திட்டத்தின் கீழ் முதல் விமானம் இன்று காலை தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நெதர்லாந்திலிருந்து நேற்று கிளம்பிய 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் 'SQ329', இன்று காலை 5.55 மணிக்குத் தரையிறங்கும் என்று கூறப்பட்டது. அமெரிக்காவிலிருந்து கிளம்பும் முதல் விடிஎல் விமானம் நாளை காலை சிங்கப்பூரில் தரையிறங்கும்.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 150,000ஐத் தாண்டியது

சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 2,553 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனுடன் இங்கு பதிவாகியுள்ள ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 150,000ஐத் தாண்டிவிட்டது. சமூகத்தில் 2,008 பேருக்கும் தங்குவிடுதிகளில் 544 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து வந்தவர் ஒருவருக்கும் கிருமி தொற்றியதாக கூறப்பட்டது.

மேலும், கிருமித்தொற்றால் 78 வயதுக்கும் 93 வயதுக்கும் இடைப்பட்ட அறுவர் உயிரிழந்துவிட்டனர். இறந்தவர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் நால்வர். எஞ்சிய இருவரில் ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர், மற்றொருவர் தம் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர் ஆவார். உயிரிழந்தவர்களுக்கு வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. செப்டம்பர் 20 முதல் தினமும் கொவிட்-19 தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.