கொவிட்-19 தொற்று அபாயம் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுக்கும் செயலி

கொவிட்-19 கொள்­ளை­நோய் தொடங்­கி­யது முதல், உல­கெங்­கிலும் தொடர்­பு­க­ளின் தட­ம­றி­யும் செய­லி­கள் பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்ட ஒரு­வரு­டன் தொடர்­பில் இருந்­தி­ருப்­பதை பய­னா­ளர்­க­ளுக்­குத் தெரி­விப்­பதே இச்­செ­ய­லி­க­ளுக்கு வழக்­கம்.

இருப்­பி­னும், தொற்று ஏற்­படும் அபா­யம் இருப்­பதை முன்­ன­தா­கவே எச்­ச­ரிக்­கும் அமைப்­பு­மு­றையை இச்­செ­ய­லி­கள் கொண்­டி­ருந்­தால் அது மேலும் பய­னுள்­ள­தாக இருக்­கும். தேவை­யான முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்­த­வாறு தொற்று ஏற்­படும் அபா­யத்­தி­லி­ருந்து மக்­கள் தங்­க­ளைத் தற்­காத்­துக்­கொள்­ள­லாம் என்று கார்­னகி மெலன் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கணி­தப் பேரா­சி­ரி­யர் லோ போ-ஷென் கூறி­னார். அவர் உரு­வாக்­கிய 'நொவிட்' செய­லி­யின் நோக்­க­மும் அதுவே. பய­னா­ள­ரு­டன் அடிக்­கடி தொடர்­பில் இருப்­போ­ரைக் கொண்ட கட்­ட­மைப்பை, செய­லி­யின் எச்­ச­ரிக்கை அமைப்பு­முறை முன்­னரே கண்­கா­ணிக்­கும்.

'டிரேஸ்­டு­கெ­தர்' செயலி போன்றே 'புளு­டூத்' தொழில்­நுட்­பத்தை 'நொவிட்' பயன்­ப­டுத்தி ஒரு­வ­ரது தொடர்­பு­களை வரி­சைப்­படுத்­தும். உதா­ர­ணத்­திற்கு, நேர­டித் தொடர்­பாக தின­மும் பார்க்­கும் குடும்ப உறுப்­பி­னரை முதல் தொடர்பு­நிலை என்­றும் இது­வரை பார்த்­தி­ராத அந்­தக் குடும்ப உறுப்­பி­ன­ரு­டைய வேலை நண்­பரை இரண்­டா­வது தொடர்­பு­நிலை என்­றும் செயலி வகுத்­துக்­கொள்­ளும்.

இதன்­படி, 12 தொடர்­பு­நி­லை­கள் வரை உள்­ளன. கொவிட்-19 உறுதி­செய்­யப்­பட்ட ஒரு­வர், அந்த 12 தொடர்­பு­நி­லை­க­ளுக்­குள் இருந்­தால், பய­னா­ள­ருக்­குத் தெரி­விப்­ப­து­டன் அவ­ரது தொடர்­பு­நிலை என்ன என்­ப­தை­யும் செயலி குறிப்­பி­டும்.

கொவிட்-19 கிரு­மி­யை­விட கொடிய கொள்­ளை­நோய்­கள் எதிர்­கா­லத்­தில் வரக்­கூ­டும். அந்­நி­லை­யில் தொடர்­பு­க­ளின் தட­ம­றி­யும் இந்த மாறு­பட்ட எச்­ச­ரிக்கை முறை, பெரி­தும் கைகொ­டுக்­க­லாம் என்­கி­றார் திரு லோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!