பள்ளியிலும் பல்கலைக்கழகத்திலும் கற்பவை யாவும் வெறும் அடிப்படைக் கல்வியே. தொடர்ந்து கற்றலை மேற்கொள்வதுதான் வேலை முறை வாழ்க்கை என்றார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.
நேற்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் பகுதி பகுதியாக பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 2,000க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பட்டத்தைப் பெறுகின்றனர்.
"நாம் தொடக்கக்கால கற்றலின்போது அறிந்திருப்பவை எவ்வளவு என்பது முக்கியமல்ல, எவ்வளவு விரைவாகக் கற்கிறோம் மற்றும் கற்றலை மீண்டும் மேற்கொள்வதே முக்கியம்," என்றார் திரு சான்.
தொழில்நுட்பம் குறித்தும் அவர் பேசினார்.
"தொழில்நுட்பம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உலகில் உள்ள அனைவருக்கும் அதே சவால்கள், அதே வாய்ப்புகள். ஆனால் தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் என்று வரும்போது வேறுபடுகிறோம்," என்றார் அவர்.
இவ்வாண்டு சிங்கப்பூரின் முதல் விமான அமைப்புப் பொறியியல் திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் தங்கள் பட்டத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

