தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$87 மில்லியன் நன்கொடை திரட்டிய சமூக உண்டியல்

1 mins read
69232493-b8f7-451c-a807-76dc1958da0c
-

சிங்கப்பூரின் சமூகச் சேவை அமைப்புகளுக்காக சமூக உண்டியல், $87 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைத் திரட்டி உள்ளது. தான் நிதி வழங்கும் திட்டங்களுக்காக அது $58 மில்லியனை வழங்கியும் இருந்தது. 200 முக்கிய உதவித் திட்டங்களுக்கும் 100 சமூகச் சேவை அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கும் நன்கொடைத் தொகை உதவிபுரிந்துள்ளது. மேலும், கொவிட்-19 தொடர்பான திட்டங்களுக்கும் திரட்டப்பட்ட தொகை கைகொடுத்துள்ளது.

கொள்ளைநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டோரை உள்ளடக்கி ஆதரவு தரும் 'துணிகரத் திட்டங்களுக்கான நிதித் திட்டம்' வழி 4,500 பேருக்குக் கிட்டத்தட்ட $4 மில்லியன் வழங்கப்பட்டதாக சமூக உண்டியலின் தலைவர் ஃபிலிப் டான் நேற்று இஸ்தானாவில் நடந்த விருது நிகழ்ச்சியில் கூறினார். அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்ட இவ்விருது நிகழ்ச்சியில் 190 அமைப்புகளும் தனிநபர்களும் தங்களின் பங்களிப்புக்காக சிறப்பிக்கப்பட்டனர்.