வட்டார நாடுகளிலிருந்து எரிசக்தி இறக்குமதி

சிங்­கப்­பூர் அதன் மின்­சா­ரக் கட்­ட­மைப்­பைக் கரி­ம­மில்­லாத ஒன்­றாக மாற்ற பல்­வேறு உத்­தி­மு­றை­களை ஆராய்ந்து வரு­கிறது. சூரிய சக்தி பயன்­பாட்டை அதி­க­ரிப்­பது, வட்­டார நாடு­க­ளி­லி­ருந்து குறைந்த அள­வி­லான கரி­மம் கொண்ட எரி­சக்­தியை இறக்­கு­மதி செய்­வது போன்ற உத்­தி­கள் ஆரா­யப்­ப­டு­வ­தாக வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்­ளார்.

முதல்­மு­றை­யாக நடை­பெற்ற சிங்­கப்­பூர் பசு­மைத் திட்டப் பாது­காப்பு நிகழ்­வில் அவர் நேற்று உரை­யாற்­றி­னார். நிகழ்­வுக்கு வர்த்­தக, தொழில் அமைச்சு ஏற்­பாடு செய்­தது. கடந்த ஐந்து ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரின் சூரிய சக்தி ஆற்­றல் ஆறு மடங்­குக்­கும் அதி­க­மாக அதி­க­ரித்­துள்­ளது. 2030ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூ­ரில் சூரிய சக்தி பயன்­பாட்டை ஐந்து மடங்கு உயர்த்துவதே இலக்கு. ஓர் ஆண்­டுக்கு ஏறத்­தாழ 350,000 வீடு­

க­ளுக்­குத் தேவை­யான எரி­சக்­திக்கு இது சமம். வட்­டார நாடு­க­ளின் எரி­சக்­திக் கட்­ட­மைப்­பு­க­ளை­யும் பயன்­ப­டுத்த சிங்­கப்­பூர் திட்­ட­

மிட்­டுள்­ள­தாக திரு கான் தெரி­வித்­தார்.

"100 மெகா­வாட் வரை­யி­லான மின்­சா­ரத்தை மலே­சி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யும் சோத­னைத் திட்­டத்­தில் நாங்­கள் ஈடு­பட்­டுள்­ளோம். வட்­டார நாடு­க­ளி­லி­ருந்து வரும் பெரிய அள­வி­லான, குறைந்த கரி­மம் கொண்ட எரி­சக்­தி­யைப் பற்றி மேலும் தெரிந்­து­கொள்ள இந்­தச் சோத­னைத் திட்­டம் உத­வும்," என்று திரு கான் கூறி­னார்.

இதற்­கி­டையே, லாவோஸ், தாய்­லாந்து, மலே­சியா, சிங்­கப்­பூர் எரி­சக்தி ஒருங்­கி­ணைப்­புத் திட்­ட­மும் தொடங்­கி­யுள்­ளது. இந்த நான்கு நாடு­க­ளுக்கு இடையே 100 மெகா­வாட் வரை­யி­லான எரி­சக்தி வர்த்­த­க­மும் இத்­திட்­டத்­தில் அடங்­கும்.

"சிங்­கப்­பூர் ஓரு சிறிய நாடு. மறு­சு­ழற்சி செய்­யக்­கூ­டிய எரி­சக்தி வளங்­களை வைத்­தி­ருக்க இயற்கை வளங்­கள், போது­மான நிலம், தகுந்த பரு­வ­நிலை இல்லை. எனவே, நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய மேம்­பா­டு­க­ளுக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டு­கிறது. எங்­க­ளைப் பொறுத்­த­வரை பரு­வ­நிலை மாற்­றம் உல­கம் தற்­போது எதிர்­நோக்­கும் சவா­லா­கும்," என்று அமைச்­சர் கான் கூறி­னார்.

சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030 இவ்­வாண்டு தொடங்­கி­யது. கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைக்க இத்­திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டத்­தில் ஐந்து முக்­கிய அம்­சங்­கள் உள்­ளன.

இயற்­கைச் சூழ­லில் அமைந்­துள்ள நக­ரம், நீடித்த நிலைத்­தன்­மை­யு­ட­னான வாழ்க்­கை­முறை, எரி­சக்தி மீட்டமைப்பு, பசு­மைப் பொரு­ளி­யல், மீள்­தி­றன்­மிக்க எதிர்­கா­லம் ஆகி­யவை அந்த ஐந்து முக்­கிய அம்­சங்­க­ளா­கும்.

வர்த்­த­கர்­க­ளை­யும் தொழில் துறைப் பிர­தி­நி­தி­க­ளை­யும் ஈடு

­ப­டுத்­து­வதே நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சி­யின் இலக்கு.

நிகழ்ச்­சி­யில் வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர்­க­ளான லோ யென் லிங்­கும் ஆல்­வின் டானும் கலந்­து­கொண்­ட­னர். பசு­மைப் பொரு­ளி­யல் சிங்­கப்­பூ­ருக்­குப் புதிய வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும் என்­றும் திரு கான் குறிப்­பிட்­டார். "கரி­மச் சேவை நடு­வ­மாக சிங்­கப்­பூர் உரு­வெ­டுக்­கும் வாய்ப்பு இருப்­பதை நாங்­கள் உணர்­கி­றோம்.

"குறைந்த அள­வி­லான கரி­மம் கொண்ட எதிர்­கா­லத்தை உலக நாடு­கள் நோக்­கிச் செல்­லும்­போது அதற்­கான திட்­டங்­களை நிர்­வ­கிக்க நிறு­வ­னங்­க­ளுக்­குத் தகுந்த நிபு­ணத்­து­வம் தேவைப்­படும்.

"கரி­ம­மற்ற எதிர்­கா­லத்தை இலக்­கா­கக் கொண்­டுள்ள வட்­டார பங்­கு­தா­ரர்­க­ளு­டன் பங்­கா­ளித்­து­வ அடிப்படையில் ஈடு­ப­ட­வும் அவர்­

க­ளுக்கு ஆத­ரவு வழங்­க­வும் நாங்­கள் விரும்பு­கி­றோம்," என்­றார் திரு கான். நீடித்த நிலைத்­தன்­மைத் திட்­டங்­கள் தொடர்­பாக உள்­ளூர் வர்த்­த­கங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க பயி­ல­ரங்­கு­களை ஆத­ரிக்­கும் திட்­டத்தை என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் இம்­மா­தத் தொடக்­கத்­தில் தொடங்­கி­யது.

இதற்­கி­டையே சிங்­கப்­பூர், உல­க­ளா­விய எரி­பொ­ருள் தட்­டுப்­பாடு நிலவி வரும் வேளை­யில், நாட்­டின் எரி­சக்­திப் பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு, தயார்­நிலை எரி­பொ­ருள் வச­தி­களை உரு­வாக்­க­வி­ருக்­கிறது. அதி­லி­ருந்து மின்­சார நிறு­வ­னங்­கள் மின்­சா­ரம் தயா­ரிப்­ப­தற்கு எரி­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!