இவ்வாண்டுக்கான கிறிஸ்மஸ் உணர்வை கொவிட்-19 சூழலால் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் ஆர்ச்சர்ட் சாலையில் கிறிஸ்மஸ் ஒளியூட்டுக்குப் பொறுப்பு வகிப்பவர்கள் உறுதியாக உள்ளனர்.
எனவே, மலர்களைக் கருப்
பொருளாகக் கொண்ட ஒளி
யூட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு நடவடிக்ககைகளும் கலைநிகழ்ச்சிகளும் இருக்காது. ஆனால் மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப்பூர் ஹோட்டலுக்கு முன்புறம் பெரிய வெளிப்புற காணொளி ஒளிபரப்பப்படும். மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பிரபல கிறிஸ்மஸ் பாடல்கள் ஒலிக்கும் என்று ஆர்ச்சர்ட் சாலை வர்த்தகச் சங்கம் நேற்று கூறியது.
68 கிலோமீட்டர் நீளமுள்ள வண்ண விளக்குகளும் பெரிய அலங்காரங்களும் பார்ப்பவர் கண்களைக் கவரும் வகையில் காட்சிக்கு வைக்கப்படும். நம்பிக்கை, மீள்திறன்மிக்க பயணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்வாண்டின் கிறிஸ்மஸ் ஒளியூட்டு அமையும் என்று தெரி
விக்கப்பட்டது.
கிறிஸ்மஸ் ஒளியூட்டு பொதுமக்களை ஆர்ச்சர்ட் சாலைக்கு ஈர்க்கும் என்று சங்கத்தின் தலைவர் மார்க் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
இதனால் ஆர்ச்சர்ட் சாலையில் வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

