எதிர்பாரா விதமாக 2019ஆம் ஆண்டு சீனப் பூத்தாண்டின் முதல் இரண்டு நாட்களில் தமது குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்ததால் உள்ளூர் கடல் உணவு விநியோக நிறுவனமான சோங் ஃபிஷ் டீலர் நிறுவனத்துக்கு ஏறத்தாழ $3,000 இழப்பு ஏற்பட்டது. பல சிறிய, நடுத்தர நிறுவனங்கள் போல இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்நிறுவனத்திடம் நிபுணத்துவத் திறன் இல்லை. இதுபோன்ற
பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும்கூட அவற்றால் ஏற்படும் இழப்பு அதிகம்.
தற்போது, தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோரின் உதவி யுடன் சோங் ஃபிஷ் டீலர் நிறுவனம் தனது தொழிற்சாலையிலும் பத்து கடைகளிலும் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உணர்
கருவிகளைப் பொருத்தியுள்ளது.
அளவுக்கு அதிகமான மின்
சாரம் பயன்படுத்துவதைத் தடுக்க இந்த உணர்கருவிகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ன்கீழ் சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து நீடித்த நிலைத்தன்மையுடனான அணுகுமுறையை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கடைப்
பிடிக்க உதவும் வகையில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மூன்று கல்லூரிகள் இணைந்து செயல்
படுகின்றன.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் இந்தத் திட்டத்தை நடை
முறைப்படுத்துவதற்கு முன்பு குளிர்சாதனப் பெட்டிகள் பழுதடைவதைத் தடுக்க அவற்றின் வெப்பநிலையைக் கண்காணிக்கும் முறை இருப்பது குறித்து தமக்குத் தெரியாது என்று சோங் ஃபிஷ் டீலர் நிறுவனத்தின் மனிதவள, நிர்வாகப் பிரிவின் மேலாளர் திரு சார்ல்ஸ் சியே தெரிவித்தார்.
இதற்கு முன்பு குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலையை ஊழியர்கள் சரிபார்த்து பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திரட்டப்பட்ட தரவுகள் பிறகு கணினியில் பதிவு செய்யப்பட்டன. இந்த அணுகுமுறை சவால்மிக்கதாக இருந்தது என்றார் திரு சியே.
இந்தச் செய்முறை கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாற்றப்பட்டது. நிறுவனத்தின் இயங்கு
முறையை சுற்றுப்புறத்துக்கு ஏற்
புடையதாக்க தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மின்னணுவியல் துறையில் பயிலும் மூன்று மாணவர்களும் இரண்டு விரிவுரை
யாளர்களும் இணைந்து செயல்பட்டனர். இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்குள் சோங் ஃபிஷ் டீலர் நிறுவனத்துக்குச் சொந்தமான சில குளிர்சாதனப் பெட்டிகளில் கிட்டத்தட்ட 50 உணர்கருவிகளை அந்த மாணவர்கள் பொருத்தினர். இதற்கு ஏறத்தாழ $2,000 செலவானது. இந்தத் தொழில்நுட்பத்தால் எரிசக்தியை மிச்சப்படுத்தி மாதத்துக்கு குறைந்தது $4,450 சேமிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் மின்னணுவியல் துறை மூத்த விரிவுரையாளராகப் பணிபுரியும் 57 வயது திரு வில்லியம் சியூ சீ குவின் தெரிவித்தார்.

