வர்த்தகங்கள் இணையம் மூலம் கலந்துரையாடல்களை நடத்த புதிய இருவழித் தொடர்பு காணொளிச் சேவையும் இணையம் மூலம் கலந்துரையாடல் நடத்தும் தளமும் நேற்று அறிமுகப்
படுத்தப்பட்டன.
இந்தப் புதிய தளங்களைப் பயன்படுத்தி வர்த்தகங்கள் இணையம் மூலம் கலந்துரையாடல்களை நடத்தலாம், அலுவலகச் சுற்றுப்பயணங்களுக்கு ஏற்பாடு செய்யலாம், திட்டங்களுக்கான இடங்கள் குறித்து ஆய்வு நடத்தலாம். தங்களைச் சுற்று நடப்பவற்றைப் பார்த்து கலந்
துரையாடல்களை நடத்த இந்தத் தளம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி வெவ்வேறு இடங்களில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் கலந்துரையாடலில் ஈடுபடுவது போல புதிய தளம் காட்டும்.
புதிய தளம் சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் அறிமுகப்
படுத்தப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் ஆஸ்திரேலியாவிலும் இத்தளம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்குள் நடத்தப்படும் கலந்துரையாடல்
களுக்கும் வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல்களுக்கும் புதிய தளத்தைப் பயன்படுத்தலாம்.
வெவ்வேறு நாடுகளில் இருப்போருடன் கலந்துரையாடல்களை ஒருங்கிணைப்பது இதற்கு முன்பு சவால்மிக்கதாக இருந்ததாக தளத்தை உருவாக்கிய செர்ட்டிஸ் நிறுவனம் கூறியது.
ஒவ்வோர் அமைப்பின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய தகுந்த ஏற்பாடு செய்யலாம் என்று செர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை மின்னிலக்க அதிகாரி திரு ஃபூஜி ஃபூ தெரிவித்தார்.
புதிய தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் அனு
பவம் குறித்து தெரிந்துகொள்ள எங்கள் குழு அவர்களுடன் இணைந்து செயல்படும்," என்று திரு ஃபூ கூறினார். புதிய தளத்தைப் பயன்படுத்து வதற்கு ஏறத்தாழ $10,000லிருந்து $50,000 வரை செலவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

