கரிம வெளியீட்டைப் போக்க $6.5 மி. பரிசுத் திட்டம் அறிவிப்பு

பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவிப்பு

கரிம வெளி­யீடு அதி­க­ரிப்­ப­தைக் குறைப்­ப­தற்கு சிங்­கப்­பூர் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது. இந்­நி­லை­யில், சிங்­கப்­பூர் தண்­ணீர் சுத்­தி­ரிப்பு ஆலை­களில் கரிம உமிழ்வு அல்­லது வெளி­யீட்டை முற்­றி­லும் குறைப்­ப­தற்கு பொதுப் பய­னீட்­டுக்­க­ழ­க சிங்­கப்­பூர் தண்­ணீர் முகவை $6.5 மில்­லி­யன் பரி­சுத் திட்­டம் ஒன்றை அறி­வித்­துள்­ளது.

'கார்­பன் ஸீரோ கிராண்ட் சேலஞ்ச்' என்­னும் இந்­தத் திட்­டம் நேற்று தொடங்கி வைக்­கப்­பட்­டது. தண்­ணீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­களில் ஏற்­படும் கரிம வெளி­யீட்­டைக் குறைப்­ப­தற்­கான வழி­வ­கை­களை ஆராய்ந்து, சரி­யான தீர்வு காண்­ப­வர்­க­ளுக்கு இந்­தத் தொகை அளிக்­கப்­படும்.

இதில் தண்­ணீர் சார்ந்த துறை­யில் உள்ள புத்­தாக்­கத் திற­னா­ளர் மட்­டும் அல்­லது உல­கெங்­கி­லும் உள்ள மற்ற துறை­க­ளைச் சார்ந்த புத்­தாக்­கத் திற­னா­ளர்­களும் கலந்து­கொண்டு தண்­ணீர்த் துறை­யில் உரு­வா­கும் கரிம வெளி­யீட்டை முற்­றி­லும் குறைக்க தீர்­வு­கா­ண­லாம்.

கரி­மப் படி­வு­க­ளைக் கண்­ட­றி­வது, பயன்­ப­டுத்­து­வது, சேமிப்­பது, நீக்­கு­வது போன்­ற­வற்­றுக்­கான தீர்வு­கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றன.

2050ஆம் ஆண்­டுக்­குள் கரிம வெளி­யேற்­றத்தை அடி­யோடு அகற்ற வேண்­டும் என்று பொதுப்­ப­ய­னீட்­டுக் கழ­கம் இலக்கு கொண்­டுள்­ளது. அந்த இலக்கை எட்­டு­வதற்கு ஏற்ப புத்­தாக்­கத் திற­னா­ளர்­க­ளின் தீர்­வு­களை அது எதிர்­பார்க்­கிறது. இந்­தத் தீர்­வு­கள் எந்­த­வொரு தொழில்­நுட்ப நிலை­யையும் கொண்­டி­ருக்­க­லாம். ஆனால் பொதுப்­ப­ய­னீட்­டுக் கழ­கச் செயல்­மு­றை­க­ளு­டன் இணைந்து, பத்­தாண்­டு­க­ளுக்­குள் அல்­லது அதற்கு முன்­னர், கரிம வெளி­யீட்டை முற்­றி­லும் ஒழிக்­கும் புதிய தொழில்­நுட்­பம் வர்த்­தக ரீதி­யில் அனை­வ­ரை­யும் எட்­டக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்­டும்.

இதற்­கான முன்­மொ­ழி­வு­களை இப்­போது முதல் 2022ஆம் ஆண்டு, பிப்­ர­வரி 24ஆம் தேதிக்­குள் சமர்ப்­பிக்­க­லாம்.

"இது ஒரு திறந்­த­வெளி புத்­தாக்க சவா­லாக இருந்­தா­லும் சிங்­கப்­பூர் மற்­றும் உலக நாடு­க­ளைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்­களும் நிறு­வ­னங்­களும் கலந்­து­கொள்­ள­லாம்," என்று பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் நிலை­மைத்­தன்­மைக்­கான தலைமை அதி­காரி குமாரி சோங் மியென் லிங் கூறி­னார்.

கரிம வெளி­யீட்டை முற்­றி­லும் ஒழிப்­ப­தற்கு கழ­கம் மும்­முனை உத்­தி­க­ளைக் கையாண்­டு ­வ­ரு­கிறது. அவை, கரிம வெளி­யீட்டை அதி­க­ரிக்­கும் சாத­னங்­களை மாற்­று­வது, அதன் பயன்­பாட்­டைக் குறைப்­பது, அல்­லது அவற்றை நீக்­கு­வது ஆகி­யவை ஆகும்.

அதன்­படி பெரும்­பா­லான கட்­ட­டக் கூரை­கள், நீர்த்­தேக்­கங்­கள் போன்­ற­வற்றை கரி­மம் வெளி­யி­டக்­கூ­டிய வகை­யைச் சார்ந்த எரி­சக்­திக்கு மாற்­றாக சூரிய ஒளி மூலம் எரி­சக்­தித் தக­டு­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

எரி­சக்தி, ரசா­ய­னத் துறை­களி­லும் கரிம வெளி­யேற்­றத்தை முற்­றி­லும் குறைக்­கும் வகை­யில் அதன் செயல்­பா­டு­களில் புத்­தாக்க மாற்­றங்­களை சிங்­கப்­பூர் ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

இது­போன்று அனைத்­துத் துறை­க­ளி­லும் கரிம வெளி­யீ­டற்ற எரி­சக்­திச் சாத­னங்­க­ளைப் பயன்­படுத்த பல்­வேறு முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!