500 பேரிடம் 400,000 இணைய மோசடி

500 பேரிடம் 400,000 இணைய மோசடி

1 mins read
d62a5d91-a89e-4fc7-973d-75f1f3c552c4
-

இணைய விளை­யாட்­டு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் சொகுசு நாற்­கா­லி­கள், கணினி விளை­யாட்­டுக் கரு­வி­கள், மின்­னி­யல் பொருட்­களை விற்­ப­தா­கக் கூறி 500 பேரி­டம் 400,000 வெள்ளி மோசடி செய்­த­தாக சந்­தே­கத்­தின்­பே­ரில் 25 வயது ஆட­வர் ஒரு­வரை போலிஸ் நேற்று கைது செய்­தது. நேற்று முன்­தி­னம் இவரிடம் ஏமாந்­த­தா­கக் கூறப்­படும் சில­ர் அளித்த புகாரை அடுத்து அந்த ஆட­வர் கைது­செய்­யப்­பட்­டார். இணை­யத்­தில் வாங்­கிய பொருட்­கள் வந்து சேர­வில்லை என­வும் அந்­தப் புகா­ரில் அவர்­கள் தெரி­வித்­தாக போலிஸ் தெரி­வித்­தது. 'கரோ­செல்' இணை­யத் தளத்­தில் தள்­ளு­படி விலை­யில் தரப்­ப­டு­வ­தாக இருந்த விளம்­ப­ரத்­தைக் கண்டு மயங்கி, அவர்­கள் 'பேநவ்' மற்­றும் வங்கி பணப்­ப­ரி­மாற்­றம் ஆகி­யவை வழி­யா­கப் பணம் செலுத்­தி­யது தெரி­ய­வந்­துள்­ளது.