சட்டவிரோத மருந்து கடத்தல் சம்பவங்கள் முறியடிப்பு

ஓட்­டுண்ணி நோய்க்கு எதி­ரா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் மருந்து உள்­ளிட்ட பல்­வேறு மருந்­து­களை சிங்­கப்­பூ­ருக்­குள் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கடத்த முயன்ற சம்­ப­வங்­கள் கடந்த மாதம் ஐந்து முறை நிகழ்ந்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று தெரி­வித்­தது. அந்­தக் கடத்­தல் சம்­ப­வங்­களை அதி­காரி­கள் தடுத்து நிறுத்­தி­யுள்­ள­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

செப்­டம்­பர் 10ஆம் தேதிக்­கும் அக்­டோ­பர் 6ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலக்­கட்­டத்­தில் 23,100 ஐவெர்­மெக்­டின் மாத்­தி­ரை­கள் சட்­ட­வி­ரோ­த­மாக இறக்கு­மதி செய்­யப்­ப­ட­வி­ருந்­த­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

ஐவர்­மெக்­டின் அந்த மருந்து கொவிட்-19 தொற்­றில் இருந்து பாது­காக்­கும் என்ற தவ­றான தக­வல்­கள் இணை­யத்­தில் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன.

சாங்கி ஏர்­ஃபி­ரைட் சென்­டர், ஏர்­மெ­யில் டிரான்­சிட் சென்­டர் ஆகிய இடங்­களில் 2,000 ஹைட்­ரோ­கு­ளோ­ரோ­கு­யின் மற்­றும் 2,048 மைகோ­ஃபீ­னோ­லேட் மொஃபிடில் மாத்­தி­ரை­களும் சட்­ட­வி­ரோ­த­மாக சிங்­கப்­பூ­ருக்­குள் கடத்­தப்­ப­ட­விருந்­ததை அதி­கா­ரி­கள் முறி­ய­டித்­த­னர் என்­றும் ஆணை­யம் தெரி­வித்­தது. அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத மருந்­து­களை சட்­ட­வி­ரோ­த­மாக சிங்­கப்­பூ­ருக்­குள் கடத்­து­வது குறித்து ஐசிஏ எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இந்த மாதத் தொடக்­கத்­தில் 65 வய­தான மாது ஒரு­வர், இது­போல் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத ஐவர்­மெக்­டின் என்­னும் மாத்­தி­ரையை உட்­கொண்­ட­தால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு வாந்தி எடுத்து, கைகால் மூட்­டு­கள் வீங்­கிய நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அந்த மாதுக்கு இந்த மாத்­தி­ரையை எடுத்­துக்­கொண்­டால் கொவிட்-19 தொற்­றில் இருந்து பாது­காத்­துக்­கொள்­ள­லாம் என்று அவ­ரது தேவா­லய நண்­பர் ஒரு­வர் கூறி­ய­தாக விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!