கையூட்டு: தகாஷிமயா மேலாளருக்குச் சிறை

கையூட்டு: தகாஷிமயா மேலாளருக்குச் சிறை

1 mins read
3bf39a48-749f-4ba5-b498-05618a2ef002
-

தகா­ஷி­மயா கடைத்­தொ­கு­தி­யின் பாது­காப்­புப் பிரி­வுக்­குப் பொறுப்பு வகித்து வந்த ஒரு­வ­ருக்கு, கையூட்டு பெற்­ற­தற்­காக பத்து மாதச் சிறைத் தண்­ட­னை­யும் $42,500 அப­ரா­த­மும் நேற்று விதிக்­கப்­பட்­டது.

சான் குவென் தோங், என்ற 64 வயது ஆட­வர் அந்த நிறு­வ­னத்­தின் மூத்த பிரிவு மேலா­ள­ரா­க­வும் பணி­பு­ரிந்­தார். கடைத்­தொ­கு­தி­யில் குறை­வான எண்­ணிக்­கை­யில் பாது­காப்பு அதி­காரி­கள் பணி­யில் அமர்த்­தப்­பட்­டி­ருந்­ததை மறைப்­ப­தற்­காக அவர் கையூட்டு பெற்­ற­தாக விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு நிறு­வ­னங்­கள், ஒப்­பந்­தத்­தில் கூறப்­பட்­டுள்­ள­படி முறை­யான சேவை வழங்­கு­வதை சான் குவென் உறுதி செய்ய வேண்­டும். அவ்­வா­றி­ருக்­கை­யில், சான் பாது­காப்பு அதி­கா­ரி­கள் குறை­வாக வேலை­யில் அமர்த்­தப்­பட்­டி­ருப்­பதை மறைப்­ப­தற்­காக அந்த பாது­காப்பு நிறு­வ­னங்­க­ளி­டம் மாதந்தோறும் $4,000 கையூட்டு பெற்­ற­தா­கக் விசாரணையில் தெரியவந்தது.