விதிகளை மீறும் சைக்கிளோட்டிகளுக்கான அபராதம் அதிகரிப்பு

விதிகளை மீறும் சைக்கிளோட்டிகளுக்கான அபராதம் அதிகரிப்பு

2 mins read
d7653411-6eb3-4568-a090-56b018fe1d26
-

போக்குவரத்து விதிகளை மீறும் சைக்கிளோட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் $150 அபராதம் செலுத்த வேண்டும். தற்போது இத்தொகை $75 ஆக உள்ளது.

சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் செல்வது, ஒற்றை வழிச் சாலைகளில் மற்றொரு சைக்கிளோடு அருகருகே செல் முனைவது, விரைவுச் சாலைகளில் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட நடப்பிலுள்ள சாலையில் செல்லும்போது மீறப்படும் விதிகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்படும். அத்துடன், குழுவாக சைக்கிள் ஓட்டுவோருக்கான புதிய விதிகளுக்கும் பொருந்தும். புதிய விதியின் படி, அதிகபட்சம் ஐந்து சைக்கிள் ஓட்டுநர்கள் ஒரே வரிசையில் செல்லலாம், இரண்டு வரிசைகளாக இருந்தால் 10 பேர் வரை, ஐவர் கொண்ட வரிசைகளில் செல்லலாம்.

அபராத அதிகரிப்பை இன்று அறிவித்த போக்குவரத்து அமைச்சு, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து துடிப்பான நடமாட்ட ஆலோசனை குழுவின் (Active Mobility Advisory Panel) அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டதாகக் கூறியது.

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தடங்கள் உள்ள சாலைகளில் சைக்கிளோட்டிகள் தொடர்ந்து இரு வரிசைகளில் செல்ல அரசாங்கம் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

குற்றம் புரியும் வாகன ஓட்டிகள், சைக்கிள் ஓட்டிகளுக்கு எதிரார அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

மிகவும் கடுமையான குற்றத்துக்கு, சைக்கிள் ஓட்டி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம். முதல் முறை குற்றம் புரிவோருக்கு $1,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்கு $2,000 வரை அபராதம் மற்றும்/அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.