சிங்கப்பூரில் ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்று: அதிகபட்சம் 1,000 ரசிகர்களுக்கு அனுமதி

சிங்கப்பூரில் ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்று: அதிகபட்சம் 1,000 ரசிகர்களுக்கு அனுமதி

1 mins read
2bb0bc09-42b8-4890-a818-11f9e6b4877a
-
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் ஒவ்வோர் ஆசிய கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தையும் நேரில் காண அதிகபட்சம் 1,000 ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

நுழைவுச்சீட்டுகளுக்கான விற்பனை நேற்று மாலை 4 மணியிலிருந்து தொடங்கியது.

இம்மாதம் 25ஆம் தேதியன்று திமோர் லெஸ்டேவுக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூரின் 23 வயதுக்கும் உட்பட்டோருக்கான குழு களமிறங்குகிறது.

மூன்று நாட்கள் கழித்து, சிங்கப்பூருக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே பலப்பரிட்சை நடைபெறும். இம்மாதம் 31ஆம் தேதியன்று பலம்பொருந்திய தென்கொரியாவுடன் சிங்கப்பூர் மோதுகிறது.

அனைத்து ஆட்டங்களும் ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் நடைபெறும். ஆட்டங்கள் இரவு 8 மணிக்குத் தொடங்கும்.