பேருந்து முனையங்களில் உருவான கிருமிக் குழுமங்கள் முடிவுற்றன

பேருந்து முனை­யங்­களில் உரு­வாகி இருந்த கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் அனைத்­தும் முடி­வுற்­ற­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று முன்­தி­னம் இரவு தெரி­வித்­தது.

எட்டு பேருந்து முனை­யங்­களில் கொவிட்-19 குழு­மங்­கள் உரு­வாகின. ஒவ்­வொன்­றும் முடி­வுற்ற நிலை­யில் இறு­தி­யாக இம்­மா­தம் 15ஆம் தேதி­யன்று தெம்­ப­னிஸ் பேருந்து நிலை­யத்­தின் கிரு­மிக் குழு­மம் முடி­வுற்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

முதன்­மு­த­லில் பீஷான், செங்­காங் பேருந்து முனை­யங்­களில் ஆகஸ்ட் 14ஆம் தேதி­யன்று கிரு­மித்தொற்றுக் குழு­மங்­கள் உறு­தி­செய்­யப்­பட்­டன.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை செப்­டம்­பர் 4ஆம் தேதிக்­குள் 537க்கு அதி­கரித்­தது. எட்டு முனை­யங்­கள் பாதிக்­கப்­பட்­ட­தால் ஒரு சில பேருந்து­க­ளுக்­காக பய­ணி­கள் கூடு­தல் நேரம் காத்­தி­ருக்க நேரி­டும் என்று செப்­டம்­பர் 10ஆம் தேதி­யன்று ஆணை­யம் தெரி­வித்­தது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் அல்­லது வீட்­டில் தனி­மைப்­படுத்­திக்­கொள்­ளும் நிலைக்கு ஆளா­னோர் எனச் சில நூறு ஓட்டு­நர்­க­ளால் தங்­கள் பணி­யில் ஈடு­பட முடி­யா­ததே இந்­தக் கூடு­தல் காத்­தி­ருப்பு நேரத்­திற்­குக் கார­ணம் என்று கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே இம்­மா­தம் 16ஆம் தேதி நில­வ­ரப்­படி, பொதுப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யின் முன்­க­ளப் பணி­யா­ளர்­களில் 99 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­ட­தாக ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

அத்­து­டன் வெவ்­வேறு பேருந்து முனை­யங்­க­ளைச் சேர்ந்த 49 ஓட்டு­நர்­கள், இன்­ன­மும் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து குணமடைந்து வருகின்றனர் என்று கூறப்­பட்­டது.

அவர்­களில் தெம்­ப­னிஸ் பேருந்து முனை­யத்­தைச் சேர்ந்­த­வர்­கள் 14 பேர்.

இந்­நி­லை­யில், பெரும்­பா­லான பேருந்­துச் சேவை­க­ளுக்­கு­ரிய காத்­தி­ருப்பு நேரம் அதே நிலை­யில் உள்­ளது என்­றும் இத­னால் பயணி­களுக்­குக் குறிப்­பி­டத்­தக்க பாதிப்பு ஏது­மில்லை என்­றும் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

வேலை­யி­டச் சூழ­லால் கிரு­மிப் பர­வல் ஏற்­பட்டு இத்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வாகி இருக்­க­லாம் என்று சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வச் சேவை­கள் இயக்­கு­நர் கென்­னத் மாக் கடந்த மாதம் கூறி­யி­ருந்­தார்.

அதை­ய­டுத்து கிரு­மிப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக மேலும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை ஆணை­யம் நடை­மு­றைப்­படுத்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!