மருத்துவமனைகளை வருத்தும் அழுத்தம்

சிங்­கப்­பூ­ரில் உள்ள மருத்­து­வ­மனை­கள், குறிப்­பி­டத்­தக்க அழுத்­தத்­திற்கு ஆளா­கி­யுள்­ளன. கொவிட்-19 நோயா­ளி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கென மருத்­து­வ­மனை­களில் பயன்­ப­டுத்­தப்­படும் படுக்­கை­களில் கிட்­டத்­தட்ட 90% தற்­போது நிரப்­பப்­பட்­டுள்­ளன. தீவிர சிகிச்­சைப் பிரி­வுப் (ஐசியு) படுக்­கை­களில் மூன்­றில் இரண்டு படுக்­கை­கள் நிரப்பப்­பட்­டுள்­ளன.

அண்­மைய நாட்­க­ளாக சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­மா­கப் பதி­வா­கி­வ­ரும் நிலை­யில், அழுத்­த­நிலைக்கு சிங்­கப்­பூர் மருத்­து­வ­மனை­கள் தள்­ளப்­பட்­டுள்­ளன என்று கொவிட்-19க்கு எதி­ராக அமைக்­கப்­பட்ட அமைச்­சு­கள்­நிலைப் பணிக்­குழு நடத்­திய செய்தி­யா­ளர் கூட்­டத்­தில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­னார்.

தற்­போது கொவிட்-19 நோயாளி­க­ளுக்­கென 207 'ஐசியு' படுக்­கை­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. இப்­ப­டுக்­கைப் பிரி­வில் சுவா­சிக்­கச் சிர­மப்­படும் 71 நோயா­ளி­களுக்­குத் தேவை­யான கருவி பொருத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் 75 நோயா­ளி­க­ளுக்கு சுவா­சிக்க உத­வும் கருவி பொருத்­தப்படாத நிலை­யி­லும், அணுக்­க­மான கண்­கா­ணிப்­பும் சிகிச்­சை­யும் தேவைப்­ப­டு­வ­தாக அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

"மேலும் அதிக புதிய படுக்­கை­களை நாங்­கள் சேர்க்­க­லாம். ஆனால் அதற்­குச் செல­வா­கும்," என்­றார் அவர். மற்ற சிகிச்­சை­களை மேற்­கொள்­ளத் தாம­த­மா­கும் என்று திரு ஓங் விளக்­கி­னார்.

கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக 300 'ஐசியு' படுக்­கை­களை ஒதுக்­கு­வதே அடுத்த கட்­டத் திட்­டம் என்று அவர் கூறி­னார்.

அதி­க­ரிக்­கும் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­காக பொது, சமூக, தனி­யார் மருத்­து­வ­மனை­க­ளு­டன் சுகா­தார அமைச்சு இணைந்து செயல்­பட்டு கூடு­தல் படுக்­கை­களை கொவிட்-19 நோயாளி­க­ளுக்­காக ஒதுக்­கு­வ­தில் கவ­னம் செலுத்தி வரு­கிறது.

மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் கொவிட்-19 சிகிச்சை வளா­கங்­களி­லும் (சிடி­எஃப்) தற்­போது 4,200 படுக்­கை­களை அமைச்சு நிர்­வகித்து வரு­கிறது.

தங்­கள் மீதான பளு­வைக் குறைக்­கும் நோக்­கில் சற்று உடல்­நிலை தேறிய நோயா­ளி­க­ளைக் கூடு­தல் கண்­கா­ணிப்­புக்­குச் சமூக சிகிச்சை வளா­கங்­க­ளி­டம் மருத்­து­வ­ம­னை­யின் மருத்­து­வக் குழுக்­கள் பரிந்­து­ரைக்­கின்­ற­ன.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட முதி­ய­வர்­க­ளுக்கு கொவிட்-19 ஏற்­ப­டு­வது குறைந்­துள்­ளது

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட முதி­ய­வர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­படு­வது குறைந்து வரு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் கிட்­டத்­தட்ட 1,000 பேர் வரை தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இந்த எண்­ணிக்கை நாளுக்கு நாள் குறைந்­து­கொண்டே வரு­கிறது என்­றார் திரு ஓங். நேற்று முன்­தி­னம் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 279 முதி­ய­வர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது.

இந்­தச் சரி­வுக்­குப் பல கார­ணங்­கள் உண்டு என்று குறிப்­பிட்ட அமைச்­சர் ஓங், அதில் முக்­கி­ய­மா­னது கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி என்­றார். தகு­தி­பெ­றும் 600,000க்கும் மேற்­பட்ட நபர்­கள் தங்­க­ளது 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­தா­க­வும் அத்­தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தற்­காக மேலும் 96,000 பேர் பதிந்து­கொண்­டுள்­ள­னர் என்­றும் கூறப்­பட்­டது.

தங்­க­ளின் சமூக ஒன்­று­கூ­டல்­களைக் குறைத்­துக்­கொண்டு அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்­கை­க­ளுக்கு மட்­டுமே முதி­ய­வர்­கள் செல்­கின்­றனர் என்­றும் திரு ஓங் குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும், 60 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய மூத்­தோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத நிலை­யில் தொடர்ந்து அதி­க­ள­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்ற செய்­தியை அமைச்­சர் பகிர்ந்­து­கொண்­டார்.

'ஐசியு' நோயா­ளி­கள், கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­கள் ஆகி­ய­வர்­களில் மூன்­றில் இரு­வ­ராக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மூத்­தோர் உள்­ள­னர் என்­றார் அவர்.

சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு அட்­ட­வணை அடிப்­ப­டை­யில் விடுப்பு தரப்­படும்

பொதுச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­களை, இவ்­வாண்டு இறு­தி­யில் அட்­ட­வ­ணைப்­ப­டுத்தி விடுப்­பில் போகவிடு­மாறு அந்­தந்­தச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மங்­க­ளுக்கு சுகா­தார அமைச்சு அறி­வு­றுத்­தல் குறிப்பு ஒன்றை அனுப்­பி­யுள்­ளது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­கள் மீதுள்ள அழுத்­தத்­தைத் தணிப்­பது அவ­சி­ய­மா­கி­யுள்­ள­தாக நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

கடந்த 20 மாதங்­க­ளாக அழுத்­த­நி­லைக்­குத் தள்­ளப்­பட்­டுள்ள இப்­பணி­யா­ளர்­களில் பலர், விடுப்­பின்றி வேலை செய்­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"வேலைப் பளு அதி­கம். அத்­து­டன் ஒவ்­வொரு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ள­ரின் பொறுப்­பும் முக்­கி­யம். ஆனால் அவர்­க­ளின் நல­னை நாம் காப்­ப­தும் அவ­சி­யம்" என்­றார் திரு ஓங்.

'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­க­ளைக் குறைத்­துக்­கொள்­வ­தால் அப்­ப­ரி­சோ­த­னையை மேற்­கொண்டு வரும் பணி­யா­ளர்­களைச் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவில் உத­விக்கு நிய­மிக்­க­லாம் என்­ற திட்டத்தை அவர் முன்வைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!