செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
b94ef5cc-4860-40ad-89c2-350c50761269
-

கொவிட்-19 தொற்று இருப்பதாக

தவறானவரிடம் தெரிவித்த மருந்தகம்

தமக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாக மருந்தகம் தெரிவித்ததை அடுத்து ஒரு வாரமாக பயத்தில் இருந்தார் 70 வயது திருவாட்டி டான் போ சூ. ஆனால் அவருடன் ஒத்த பெயரைக் கொண்ட வேறு ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பதாக 'பிசிஆர்' பரிசோதனையில் உறுதியான நிலையில், தவறான நபருக்கு மருந்தகம் தகவல் தெரிவித்துவிட்டது. தவறான தகவல் கிடைத்து ஒரு வாரம் கழித்துத்தான் தாம் கொவிட்-19 நோயாளி அல்ல என்ற அதிகாரபூர்வ உறுதியை திருவாட்டி டான் பெற்றார்.

ஒரு மாதமாக சிங்கப்பூரில்

கொவிட்-19 உயிரிழப்புகள்

கிட்டத்தட்ட ஒரு மாதமாக சிங்கப்பூரில் கொவிட்-19 உயிரிழப்புகள் பதிவாகிவருகின்றன. நேற்று முன்தினம் 57 வயதுக்கும் 90 வயதுக்கும் இடைப்பட்ட ஏழு சிங்கப்பூரர்கள் உயிரிழந்தனர். அத்துடன், 3,994 பேருக்குப் புதிதாக கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வார இறுதிக்குப் பின்னர் சிங்கப்பூரின் கொவிட்-19 சம்பவங்களில் திடீர் அதிகரிப்பு இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.