தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாண்டுத் திட்டத்தில் பற்பல பயனுறு அம்சங்கள்
இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 21) முதல் பிளாசா சிங்கப்பூரா, ஐஎம்எம் கட்டடம் மற்றும் பிஎல்க்யூ கடைத்தொகுதி போன்ற பகுதி
களுக்குச் செல்வோர் மின்னிலக்க நூலகத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவர். அந்த நூலகத்தின் க்யூஆர் குறியீட்டை வருடுவதன் மூலம் தேசிய நூலக வாரியம் பரிந்துரைக்கும் மின்நூல் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியும்.
வாரியத்தின் புதிய ஐந்தாண்டு உருமாற்றப் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இதுபோன்ற மின்னலக்க வசதிகள் இடம்பெற உள்ளன. நூலகங்கள் மற்றும் ஆவண வரைவுத் திட்டம் 2025 (LAB25) என்னும் அத்திட்டம் குறித்து வாரியத்தின் தலைமை நிர்வாகி இங் செர் ஃபோங் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார்.
வாரியத்தின் வழக்கமான நேரடி நூலக வருகை முறையில் மேம்பாடு காணவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக அப்போது அவர் கூறினார்.
தேசிய நூலக வாரியத்தின் தலைமையகத்திற்கும் வட்டார கிளை நூலகங்களுக்கும் பொதுமக்கள் நேரடியாகச் செல்வது ஒருபுறம் இருப்பினும் கடைத்தொகுதிகள் முதல் மருத்துவமனை வரை அல்லது பூங்காக்களில் இருப்போரும்கூட நூலக வசதிகளைப் பெறும் வகையில் வாரியம் திட்டங்களை வகுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முக்கியமாக வாழ்நாள் கற்றலை ஆதரித்தல், தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் Sure போன்ற தகவல் கல்வியறிவுத் திட்டம் போன்றவற்றின் வழி தகவலறிந்த மக்களை உருவாக்க உதவுதல், உள்ளூர் கதைசொல்லிகளுக்கு ஊக்கமளித்தல், அனைவரும் நூலக வசதிகளைப் பெறுவதை உறுதிசெய்தல் போன்றவை LAB25 வரைவுத் திட்டத்தில் அடங்கும்.
இதனைச் சாதிக்க சமூகப் பங்காளிகளின் ஆதரவை வாரியம் நாடும். உதாரணத்திற்கு, நன்யாங் பலதுறைத் தொழிற்
கல்லூரி வழங்கும் சுகாதாரம் முதல் நீடித்த நிலைத்தன்மை வரையிலான 40க்கும் மேற்பட்ட இல
வசத் திட்டங்களில் நூலக வருகையாளர்கள் அடுத்த ஈராண்டுகள் ஈடுபடலாம்.

