கொள்ளைநோய் சிரமத்திலிருந்து மீண்டெழும் நிறுவனங்கள் மனிதவளங்களை முழுமையாகப் பயன்படுத்த அழைப்பு

சிங்கப்பூரில் உள்ள வர்த்தகங்கள் கொவிட்-19 சவால்களில் இருந்து வலுவுடன் மீண்டெழ மனிதவளத் துறையின் அம்சங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கேட்டுக்கொண்டு உள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்

களின் கொள்ளைநோய் சமாளிப்பில் உதவ மனிதவள சமூகம் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். 26வது வேலை நிலவர அறிக்கையின் தொடர்பில் டாக்டர் டான் நேற்று மெய்நிகர் வழியாக செய்தி யாளர்களிடம் பேசினார்.

கொவிட்-19 கொள்ளைநோயைச் சமாளிப்பதில் வர்த்தகங்களுக்கு உதவுவதில் மனிதவளம் எந்த அளவுக்குப் பெரும்பங்காற்றுகிறது என்பதை மனிதவள அமைச்சு நேற்று தனது அறிக்கையில் விளக்கியது.

மனிதவள நிர்வாக இடையூறுகள், வேலையிடங்களின் மாற்றம், ஊழியர் ஈடுபாடு மற்றும் அவர்

களின் மனநலனைக் கவனிப்பது போன்றவற்றுக்குத் தேவைப்படும் மனிதவள உதவியை நிறுவனங்கள் நாடலாம் என்றது அமைச்சு.

வேலைகளைக் காக்கும் பொருட்டு செலவு குறைப்பு நட

வடிக்கைகளுக்குப் பொருத்தமான அம்சங்களையும் மனிதவளத் துறை அமல்படுத்தி இருப்பதாக அது குறிப்பிட்டது.

கொள்ளைநோய் சிரமங்களுக்கு இடையிலும் பல்வேறு நிறுவனங்கள் மின்னிலக்கம் மற்றும் உருமாற்ற நடவடிக்கைகளை நோக்கி வேகமாகச் செயல்படும் இவ்வேளை யில் மனிதவளத் திறன்கள் அவற்றுக்குக் கைகொடுக்கும். உத்திபூர்வ ஊழியரணியைத் திட்ட

மிடல், வேலை மறுவடிமைப்பு, திறன்வளர்ப்பு போன்றவை வர்த்தகங்களும் அவற்றின் ஊழியர்களும் வெற்றிநடை போடுவதில் ஒரு மையப்புள்ளியாக மனிதவளத் துறை விளங்கும் என்றது அமைச்சு.

மேலும், மனிதவளத் துறை நிபுணர்கள் மனிதவள நிபுணத்துவ கல்விக்கழகத்தில் பயின்று சான்றிதழ் பெற அமைச்சு வலியுறுத்துகிறது. சிங்கப்பூரில் உள்ள மனிதவளப் பயிற்றுநர்களின் ஆற்றல், திறன்கள், அனுபவம் போன்றவற்றை அங்கீகரிக்கும் தேசிய சான்றளிப்பு கட்டமைப்பின்கீழ் அந்தச் சான்றிதழ் இடம்பெற்று உள்ளது. தற்போது 4,500க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள மனிதவள நிபுணர்கள் ஐஎச்ஆர்பி என்னும் இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!