முதன்மை வட்டார புதிய வீவக வீடுகள் தொடர்பில் சிங்கப்பூரர்கள் கருத்து

முதன்மை வட்டார புதிய வீவக வீடுகள் தொடர்பில் சிங்கப்பூரர்கள் கருத்து

1 mins read
67835f31-ca23-45d6-bfdf-508ecdab8924
-
Google News Preferred Icon

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் முன்னுரிமைத் திட்டத்தை நீக்குவது, திறந்தவெளிச் சந்தையில் முதன்மை வட்டாரங்களின் வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்குவோரை வரம்புக்குள் வைப்பது ஆகிய இரு யோசனைகளை பெரும்பாலான சிங்கப்பூரர்கள் தெரிவித்துள்ளனர். முதன்மை வட்டார பொது வீடமைப்பை கட்டுப்படியானதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் ஆதரிப்பதற்கான பொதுமக்கள் ஆலோசனையில் பங்கேற்று அவர்கள் இந்த யோசனைகளைப் பரிந்துரைத்துள்ளனர்.

ஐந்தாண்டு குறைந்தபட்ச தங்கும் காலத்திற்குப் பிறகு வீவகவின் முழு வீட்டையும் வாடகைக்கு விட வீட்டின் உரிமையாளர்கள் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கருதுகின்றனர். தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. நகர மையம், கிரேட்டர் சௌதர்ன் வாட்டர் ஃபிராண்ட் போன்ற முதன்மை வட்டாரங்களில் அமையும் புதிய வீவக வீடுகள் தொடர்பான கருத்துரைப்பு நிகழ்வில் 7,500க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கருத்துத் திரட்டு கடந்த மாதம் நிறைவுபெற்றது.