தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீச்சல் வீரர் ஸ்கூலிங் பேச்சாளருக்குச் சிறை

1 mins read
a3cf69a0-8766-48bb-a674-3fe074a70714
-

ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் தங்­கப் பதக்­கம் வென்று சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை சேர்ந்த ஜோசஃப் ஸ்கூ­லிங்­கின் முன்­னாள் பேச்­சா­ள­ரான முஹ­மட் ஹஃபிட்ஸ் ஜாஃப­ருக்கு 38, நண்­பர்­களை ஏமாற்றி மோசடி செய்­த­தற்­காக 18 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஸ்கூ­லிங் நீச்­சல் பள்­ளி­யின் முன்­னாள் நிர்­வா­கி­யாகவும் இருந்த முஹ­மட் ஹஃபிட்ஸ், தன் மீது சுமத்­தப்­பட்ட எட்டு ஏமாற்­றுக் குற்றச்­சாட்­டு­களை ஒப்­புக்கொண்­டார். மேலும் இதேபோன்ற ஒன்­பது குற்­றச்­சாட்­டு­கள் அவர் மீது இருந்­தது.

முஹ­மட் ஹஃபிட்ஸ் ஒப்­புக் கொண்ட 17 குற்­றச்­சாட்­டு­களில் அவர் 17 பேரை 83,000 வெள்ளி வரை ஏமாற்­றி­யி­ருக்­கி­றார். இதில் ஒரு பகுதி தொகையைத் திருப்­பி­­அளித்துவிட்டதாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

2019ல் சிங்கப்பூரில் நடந்த 'யு2' கலைநிகழ்ச்சி மற்றும் அனைத்துலக சாம்பியன்ஸ் கிண்ணக் கண்காட்சி காற்பந்துப் போட்டிக்கு (ஐசிசி) நுழைவுச்சீட்டுகளை வாங்கித் தரு வதாகக் கூறி முஹமட் ஹஃபிட்ஸ் ஏமாற்றியிருந்தார்.