தொண்டைப் புண் கிருமிகளை அகற்றும் திரவம் - இலவச விநியோகம்

தொண்டைப் புண் கிருமிகளை அகற்றும் திரவம் - இலவச விநியோகம்

1 mins read
0fa248e1-158b-44de-8d23-87c9dc47e3ea
-

தொண்டைப் புண்களை ஏற்படுத்தும் கிருமியைக் கொல்லும் வாய் கொப்புளிக்கும் திரவத்தைப் பெற சிங்கப்பூர் குடும்பங்கள் நவம்பர் 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.

பொவைடோன்-ஐயோடின் என்ற அந்தத் திரவம், அறநிறுவனத்தின் 'ஸ்டே பிரிப்பேர்ட்' திட்டத்தின்கீழ் இலவசமாக விநியோகம் செய்யப்படும். விருப்பமுடையோர், 250 மில்லிலீட்டர் அளவு திரவத்தையும் 25 மில்லிலீட்டரை அளக்கும் குவளை ஒன்றையும் எடுக்கலாம்.

விருப்பமுடையோர்நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். பதிவு செய்துள்ள குடும்பங்கள் நவம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமானன இடங்களில் திரவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொண்டையில் புண் ஏற்படுவது போல உணர்பவர்கள் நாளுக்கு இரண்டு முதல் நான்கு முறை வரை கொப்பளிக்கலாம்.