கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீட்டிப்பு, கடைக்காரர்கள் பரிதவிப்பு

கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீட்டிப்பு, கடைக்காரர்கள் பரிதவிப்பு

2 mins read
0a8a451d-0a08-4cef-a6a3-58d706fd241f
தீபாவளி நெருங்கும் அறிகுறியே இல்லாமல் களையிழந்திருக்கும் கடைகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இரு­வர் மட்­டுமே உண­வுக் கடை­களில் ஒன்­றாக அமர்ந்து சாப்­பிட முடி­யும் என்ற கொவிட்-19 கட்­டுப்­பாட்டை அடுத்த மாதம் 21ஆம் தேதி­வரை அர­சாங்­கம் நீட்­டித்­துள்­ளது. உணவு, பானத் துறை­யில் உள்ள வர்த்­த­கர்­க­ளுக்கு இந்த நீட்­டிப்பு பெருத்த அதி­ருப்­தி­யைத் தந்­துள்­ளது.

தமது உண­வ­கத்­தில் இசை ஒலிக்க அனு­ம­திக்­கப்­ப­டாத நிலை­யில், அரு­கில் உள்ள உடற்­ப­யிற்­சிக் கூடத்­தில் பயங்­கர இசைச் சத்­த­மும் அதற்கு முகக்­க­வ­சம் அணி­யாத உறுப்­பி­னர்­கள் உடற்­ப­யிற்சி செய்­வ­தும் எந்த வகை­யில் வேறு­படு­கிறது என்று 'சேவ்­எ­ஃப்­என்­பி­எஸ்ஜி' குழு உறுப்­பி­னர் ஒரு­வர், ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கேட்­டார்.

கிருமி முறி­ய­டிப்­புக் கால­கட்­டம் கடந்த ஆண்­டில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­போது 500க்கும் மேற்­பட்ட உண­வ­கங்­கள் ஒரு­சேர இக்­குழுவை அமைத்து, ஒன்­றுக்­கொன்று ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றன. விமா­னத்­தில் 100 பேர் முகக்­க­வ­சத்தை அகற்­றி­விட்டு சாப்­பிட அனு­ம­திக்­கப்­ப­டும்­போது, வெவ்­வேறு துறை­களில் ஏன் கட்­டுப்­பாடு­கள் வேறு­ப­டு­கின்­றன என்று சிலர் கேள்வி எழுப்­பி­னர்.

கடைத்­தொ­கு­திக்­குள் ஐவ­ராக வரும் ஒரு குடும்­பம், உண­வ­கத்­தில் பிரிந்து உட்­கார வேண்­டும் என்று சொல்­வ­தற்­குப் பின்­னால் என்ன கார­ணம் என்­றும் அவர்­கள் வின­வி­னர்.

மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் (ஐசியு) உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை தமக்கு எந்த வகை­யி­லும் தெளிவை அளிக்­க­வில்லை என்று குறிப்­பிட்ட ஓர் உறுப்­பி­னர், ஐசி­யு­வில் எந்த எண்­ணிக்­கையை அடைந்­தால் கட்டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­லாம் என்ற இலக்­கைத்­தான் தாம் அறிய விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

உணவு விநி­யோ­கத் தொடர் மீது தாக்­கம், வரு­வாய் கிட்­டத்­தட்ட 30% சரிவு, வாடகை செலுத்­து­வ­தில் தாம­தம் போன்ற விவ­கா­ரங்­களும் கடைக்­கா­ரர்­க­ளுக்­குக் கவலை அளித்து வரு­கின்­றன.

கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­படு­வ­தாக ஒரே ஆண்­டில் மீண்­டும் மீண்­டும் கொவிட்-19 தொடர்­பான விதி­களை மாற்­றி­ய­தில் சிங்­கப்­பூரின் முன்­கள வர்த்­த­கச் சமூ­கத்­தி­னர் 'ஆழ்ந்த துய­ரத்­தி­லும் அழி­வின் விளிம்­பி­லும்' இருப்­ப­தாக ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் 'நியா­யத்­துக்­காக சிங்­கப்­பூர் ஒன்­று­பட்ட வாட­கை­தா­ரர்­கள்' குழு நேற்று முன்­தி­னம் குறிப்­பிட்­டது.

நெருக்­கடி நிலை­யைச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்பு நெருங்­கு­வ­தால் கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டா­லும், மூழ்­கா­மல் இருக்க, வர்த்­த­கத்­தைப் பிடித்­துக்­கொண்டு இருப்­போ­ரது கப்­ப­லையே இந்த நீட்­டிப்பு மூழ்­கடித்­து­வி­டும் என்­றது அக்­குழு.