ஒவ்வொரு வீட்டுக்கும் 10 ‘ஏஆர்டி’ கருவிகள் இன்றுமுதல் விநியோகம்

ஒவ்­வொரு வீட்­டுக்­கும் 10 'ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை' (ஏஆர்டி) கரு­வி­களை சிங்­போஸ்ட் வழி­யாக சுகா­தார அமைச்சு வழங்­க­வி­ருக்­கிறது. கரு­வி­களை விநி­யோ­கிக்­கும் பணியை இன்­று­மு­தல் 1,000 அஞ்­சல்­துறை பணி­யா­ளர்­கள் மேற்­கொள்­வர்.

பொது­மக்­க­ளுக்­குப் போது­மான 'ஏஆர்டி' கரு­வி­கள் கிடைக்க ஏது­வாக, சனிக்­கி­ழ­மை­க­ளி­லும் பணி­யா­ளர்­கள் அவற்றை விநி­யோ­கிக்­கும் பணி­யில் ஈடு­ப­டு­வர்.

'ஏஆர்டி' கரு­வி­களை விநி­யோகிக்­கும் பணியை மட்­டுமே அவர்­கள் சனிக்­கி­ழ­மை­களில் மேற்­கொள்­வர் என்று சிங்­போஸ்ட் தெரி­வித்­துள்­ளது.

வீடு­க­ளுக்கு 'எஸ்டி பயோ­சென்­சர் ஸ்டாண்­டர்ட் கியூ கொவிட்-19 ஏஜி' இல்­லப் பரி­சோ­த­னைக் கரு­வி­கள் விநி­யோ­கிக்­கப்­படும். இவை தென்­கொ­ரி­யா­வி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­ப­டு­பவை. இக்­க­ரு­வி­கள் 15 நிமி­டங்­களில் முடி­வு­க­ளைக் காட்­டி­வி­டும்.

பய­னா­ளர்­கள் பஞ்சு உருட்டை (Swab) ஒவ்­வொரு நாசித் துவா­ரத்­தி­லும் 10 முறை சுழற்றி, சளி மாதி­ரி­யைச் சேக­ரிக்க வேண்­டும். பின் அத­னைக் கொடுக்­கப்­பட்­டுள்ள திர­வத்­தில் தோய்த்து, கருவி­யின் மீது விட்டு, தொற்று முடி­வு­க­ளைப் பெற வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!