இயூ டீயில் கம்பத்து சூழலில் மூத்தோருக்கான வீவக வீடுகள்

இயூ டீயில் கம்பத்து சூழலில் மூத்தோருக்கான வீவக வீடுகள்

2 mins read
d501807e-bc72-41ce-9c29-5816b186f4e6
ஓவியர் கைவண்ணத்தில் இயூ டீயில் அமையவுள்ள ஒருங்கிணைந்த வீவக திட்டம். அடுத்த ஆண்டு பிற்பாதியில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி 2027ன் முதல் காலாண்டில் வீடுகள் தயாராகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.படம்: எம்கேபிஎஸ் ஆர்கிடெக்ஸ் -

கம்­பத்து வாழ்க்­கையை செங்­குத்­தான கட்­டட வடி­வில் மூத்த குடி­மக்­கள் அனு­ப­விப்­ப­தற்­காக கிட்­டத்­தட்ட 70 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) வீடு­கள் இயூ டீ வட்­டா­ரத்­தில் கட்­டப்­படும். இவ்­வீடு­கள், அடுத்த மாத 'பிடிஓ' விற்­பனைத் திட்­டத்­தின் கீழ் இடம்­பெறும் என்று வீவக தெரி­வித்­தது.

'இயூ டீ ஒருங்­கி­ணைந்த மேம்­பாட்­டுத் திட்­டம்' என்று தற்­போது இதற்­குப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

இங்கு சுவா சூ காங் வட்­டாரத்­தின் முதல் உண­வங்­காடி நிலை­யம், பல­துறை மருந்­த­கம், சமூக மன்­றம், ரத்த சுத்­தி­க­ரிப்பு நிலை­யம், சமூக நட­வ­டிக்­கை­க­ளுக்­கான வளா­கம், சில்­லறை வர்த்­த­கக் கடை­கள் ஆகி­ய­வற்­றை­யும் இந்­தத் திட்­டம் கொண்­டி­ருக்­கும்.

பத்து மாடி குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்­றில் மொத்­தம் 68 ஈரறை வீடு­கள் அமைந்­தி­ருக்­கும். இவை 36 அல்­லது 46 சதுர மீட்­டர் அள­வில் இருக்­கும். 55 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ரும் மட்­டுமே இவ்­வீ­டு­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கலாம்.

மூத்­தோ­ருக்கு ஏது­வான வசதி­கள் பொருத்­தப்­பட்ட நிலை­யில் வீடு­கள் இருக்­கும்.

அத்­து­டன் அறி­வார்ந்த இல்­லத்­துக்­கான தீர்­வு­க­ளைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பயன்­ப­டுத்­த­வும் தங்­களின் எரி­சக்­திப் பயன்­பாட்­டைக் கண்­கா­ணிக்­க­வும் வீடு­களில் அறி­வார்ந்த விநி­யோ­கப் பல­கை­கள் பொருத்­தப்­பட்­டி­ருக்­கும்.

இங்­குள்ள சமூ­கத் தோட்­டத்­தில் உண்­ணக்­கூ­டிய செடி­கள், பழ­ம­ரங்­க­ளைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் வளர்க்­க­லாம். பல்­பு­லன் சார்ந்த தோட்­டம், மனதை அமை­திப்­ப­டுத்­தும் தோட்­டம் போன்­ற­வை­யும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இயூ டீ கடைத்­தொ­கு­திக்கு எதிரே இந்த ஒருங்­கி­ணைந்த வீவக திட்­டம் கட்­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அட்­மி­ரல்டி, புக்­கிட் பாத்­தோக் வட்­டா­ரங்­களை அடுத்து மூத்­தோருக்­காக இயூ டீயில் இத்­த­கைய வீவக திட்­டம் உரு­வா­கி­யுள்­ளது.