வெப்ப அலைகள், டெங்கிப் பரவல் அதிகமாகும் அபாயத்தில் சிங்கப்பூர்

பரு­வ­நிலை மாற்­றத்­தால் சுகா­தா­ரம் தொடர்­பில் கவ­லை­கள் எழுந்­துள்­ளன. இந்­நி­லை­யில், வெப்ப அலை­க­ளுக்­கும் கூடு­த­லான டெங்­கிப் பர­வல்­க­ளுக்­கும் ஆளா­கும் அபாயத்­தில் சிங்­கப்­பூர் உள்­ள­தாக ஆய்வு அறிக்கை ஒன்று கண்­ட­றிந்­துள்­ளது.

ஆறா­வது 'லான்­செட்' அறிக்­கை­யின்­படி, 1986ஆம் ஆண்­டுக்­கும் 2005ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தின் சரா­சரி புள்­ளி­வி­வ­ரங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2020ல் வெப்ப அலைக்கு ஆளா­கிய 65 வய­துக்கு மேற்­பட்ட ஒட்­டு­மொத்த முதி­யோர், மேலும் 3.1 பில். நாட்­கள் பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. இந்த ஆய்­வ­றிக்­கைக்கு சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த இரு­வர் உட்­பட, 90க்கும் மேற்­பட்ட ஆய்­வா­ளர்­கள் பங்­க­ளித்­துள்­ள­னர்.

அதிக வெப்­ப­மான நாட்­களும் நேர அள­வும் கடந்த சில பத்­தாண்டு­க­ளாக உல­க­ள­வில் அதி­கரித்­துள்­ள­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது. இந்த வெப்­பத்­தில் உடற்­ப­யிற்சி மேற்­கொள்­வ­தும் பாது­காப்­பற்­றது என்று கூறப்­பட்­டது.

அதே வேளை, சிங்­கப்­பூ­ரில் அரி­தாக ஏற்­படும் 'டென்வி-3' டெங்­கிக் கிருமி வகை தொடர்­பான சம்­ப­வங்­கள் 2021ல் அதி­க­ரித்­துள்­ளன. இத்­த­கைய அதிக எண்­ணிக்­கை­யு­டன் 2022ல் காலடி எடுத்து வைப்­பது, டெங்­கிப் பர­வ­லுக்கு இட்­டுச் செல்­ல­லாம் என்று தேசிய சுற்­றுப்­புற அமைப்பு கடந்த வாரம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!