வேலை வாய்ப்பு தேடிய 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில் கசிவு

வேலை வாய்ப்பு தேடிய 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில் கசிவு

2 mins read
d306b228-9191-4c2f-b4f4-1e327cba844e
'பிரோடெம்ப்ஸ் எம்பிளாய்மண்ட் சர்விசஸ்' எனும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தேடி பதிந்த 40,000 பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. படம்: டெசோர்டன் குழு -

சிங்­கப்­பூ­ரில் உள்ள வேலை வாய்ப்பு நிறு­வ­னத்­தில் இணைய ஊடு­ரு­வல் நடந்­த­தைத் தொடர்ந்து, வேலை­வாய்ப்பு தேடி அதில் பதிந்த சுமார் 40,000 பேரின் தக­வல்­கள் இணை­யத்­தில் கசியவிடப்பட்டுள்ளன.

'பிரோ­டெம்ப்ஸ் எம்­பி­ளாய்­மண்ட் சர்­வி­சஸ்' எனப்­படும் அந்த நிறு­வ­னத்­தின் அலு­வ­ல­கம் பாய லேபார் சதுக்­கத்­தில் உள்­ளது.

கடந்த மாதம் அதன் கணி­னிக் கட்­ட­மைப்­புச் சேவை­யின் தக­வல்­கள் கள­வா­டப்­பட்டு, கட்­ட­மைப்­பில் உள்ள ஆவ­ணங்­கள் அழிக்­கப்­பட்­டன. நிறு­வ­னத்­தில் பதிந்­த­வர்­க­ளின் தக­வல்­கள் இணை­யத்­தில் வெளி­யிட்­டப்­பட்­டுள்­ளன.

அவர்­க­ளின் அடை­யாள அட்டை கள் அல்­லது கட­வுச்சீட்­டு­க­ளின் ஸ்கேன் செய்­யப்­பட்ட படங்­கள், தொலை­பேசி எண்­கள், சம்­ப­ளங்­கள், வேலை­கள், வீட்டு முக­வ­ரி­கள் போன்ற விவ­ரங்­கள் கசிந்­துள்­ளன.

வேலை வாய்ப்பு தேடி­ய­வர்­களில் பெரும்­பா­லா­னோர் சிங்­கப்­பூ­ரர்­கள் என்று தெரி­கிறது.

'டெசோர்­டன் குழு­மம்' என்று அறி­யப்­படும் இணைய ஊடு­ரு­வல் கும்­பல், இணை­ய­வ­ழித் தாக்­கு­தலை இம்­மா­தம் 4ஆம் தேதி நடத்­தி­ய­தா­கக் கூறி­யது.

தனது தாக்­கு­தலைப் பற்றி இணைய உரை­யா­டல் அறை­களில் இம்­மா­தம் 7ஆம் தேதி அக்­குழு பெருமை பேசி­யது.

கள­வா­டப்­பட்ட ஆவ­ணங்­கள், தக­வல் திரட்­டு­கள் ஆகி­ய­வற்றைக் காட்டும் காணொ­ளியை அது பதிவு செய்­தது. அதில், கணி­ணிக் கட்­ட­மைப்­பி­லி­ருந்து எல்லா ஆவ­ணங் களை­யும் திருடி, அழித்­து­விட்­ட­தாக பாதிக்­கப்­பட்ட 'பிரோ­டெம்ப்ஸ்' நிறு­வ­னத்­துக்கு கும்­பல் செய்தி அனுப்­பி­யது. அக்­குழு பணம் கேட்­ட­தா­க­வும் நம்­பப்­ப­டு­கிறது.

மேலும், அக்­கும்­பல் அந்­தத் தக­வல்­க­ளைக் கடந்த 14ஆம் தேதி இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­தது. தக­வல்­க­ளைப் பெற $3.30 என்று விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டது. தக­வல்­களை இது­வரை 60 வெவ்­வேறு தரப்­பு­கள் பெற்­றுள்­ளன.

அச்­சம்­ப­வம் பற்றி 'பிரோ­டெம்ப்ஸ்' நிறு­வ­னம் தக­வல் அளித்­துள்­ள­தாகவும் அது பற்றி விசா­ரித்து வரு­வ­தா­க­வும் தனிநபர் தக­வல் பாது­காப்பு ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.