உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நெருக்கடி; தேக்கத்தைக் குறைக்க உதவும் சிங்கப்பூர் துறைமுகங்கள்

கப்­பல்­துறை நெருக்­க­டி­யால் உல­க­ளா­விய விநி­யோ­கச் சங்­கி­லி­யில் நில­வும் சிக்­க­லைத் தீர்க்க சிங்­கப்­பூர் துறை­மு­கங்­கள் தங்­க­ளால் முடிந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன. அதில் ஒரு பகு­தி­யாக, துவாஸ் துறை­மு­கம் இன்­ன­மும் திறக்­கப்­ப­டா­த­போ­தும், அங்கு கொள்­க­லன்­களை வைக்க இடம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் கப்­பல் துறை­யில் கூடு­த­லாக 2,500 சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் வேலைக்­குச் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். இது அத்­துறை ஊழி­யர் அணி­யில் 20% உயர்­வா­கும்.

போக்­கு­வ­ரத்­துக்­கான மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் நேற்று இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார். உல­க­ளா­வி­ய கப்­பல்­துறை நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் எடுத்­து­வ­ரும் நட­வ­டிக்­கை­கள் பற்றி அவர் செய்­தி­யா­ளர் களி­டம் தெரி­வித்­தார்.

பெருந்­தொற்று போன்ற கார­ணங்­க­ளால் ஏற்­பட்ட ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யா­லும் பிற துறை­மு­கங்­கள் மூடப்­பட்­ட­தா­லும் கப்­பல் தள­வா­டத் துறை முறை­யா­கச் செயல் பட­வில்லை. அதே நேரத்­தில் கப்­ப­லில் வரும் பொருட்­கள் அதி­க­ரித்­துள்­ளன. பெருந்­தொற்­றுக்­குப் பின்­னர் வாடிக்­கை­யா­ளர்­கள் மீண்­டும் அதி­கப் பொருட்­களை வாங்கி வரு­வது அதற்­குக் கார­ணம்.

இத­னால், வேறு இடங்­களி லிருந்து இங்கு அனுப்­பப்­படும் கொள்­க­லன்­கள், செல்ல வேண்­டிய நாடு­க­ளுக்­குக் கப்­பல்­கள் இல்­லா­மல் இங்கு தேங்­கி­யுள்­ளன.

கொள்­க­லன்­களை வைக்க, கடந்த மாதம், துவாஸ் துறை­முகத்­தில் 2,000 'டிஇயூ' எனும் கொள்­ க­லன் அள­வுள்ள இடங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு டிஇயூ, 20 அடி கொள்­க­லன் பரப்­ப­ளவு கொண்­டது. ஏற்­கெ­னவே கடந்­தாண்டு இறு­தி­யில் கெப்­பல் முனை­யத்­தில் 65,000 டிஇயூ அள­வுக்கு கொள்­க­லன்­களை வைக்க இடம் அமைக்­கப்­பட்­டது.

தங்­க­ளுக்கு ஏற்­பட்ட தாம­தத்­தைச் சமா­ளிக்க சரக்­குக் கப்­பல் க­ளுக்கு சிங்­கப்­பூர் முடிந்­த­வரை உதவி வரு­வ­தாக திரு சீ குறிப்­பிட்­டார். தேவை ஏற்­பட்­டால், கொள்­க­லன்­களை வைக்க, கூடு­தல் இடங்­கள் ஒதுக்­கப்­ப­ட­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

"கப்­பல் நிறு­வ­னங்­கள், தங்­கள் தாம­தத்தை ஈடு­கட்­ட­வும் தொடர்­பு­களை அமைக்­க­வும் செயல்­பாட்­டுச் சிக்­கல்­க­ளைத் தீர்க்­க­வும் சிங்­கப்­பூரை நாடி வரு­கின்­றன. அதே நேரத்­தில் கப்­பல்­களை நிறுத்­து­தல், மாலு­மி­களை மாற்­று­தல் போன்ற பல்­வேறு சேவை­களை அவற்­றுக்கு ஒரே இடத்­தில் சிங்­கப்­பூர் வழங்­கு ­கிறது," என்­றார் திரு சீ.

ஆனால் இச்­சே­வை­களை வழங்­கு­வ­தால் கொள்­க­லன்­கள் சிங்­கப்­பூர் துறை­மு­கங்­களில் கூடு­தல் காலத்­துக்கு இருக்க நேரி­டு­கிறது என்­றும் கப்­பல்­கள் இங்கு வந்து அடைவதற்குக் ­காத்­தி­ருக்க வேண்­டிய கால­ம் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் அவர் விவ­ரித்­தார்.

சிங்­கப்­பூ­ரால் கப்­பல்­து­றைச் சிக்­கலை ஓர­ளவு குறைக்­கத்தான் முடி­யும் என்­றும் முழு­மை­யா­கத் தீர்க்க முடி­யாது என்­றும் திரு சீ கூறி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!