செய்திக்கொத்து

3 mins read
008736c8-c27a-4c2f-8b15-192a62a01062
-

இளையரைத் தாக்கிய உணவகக் குழுமத்தின் தலைமை நிர்வாகி

காரணமில்லாமல் மின்தூக்கியில் முன்பின் தெரியாத பதின்ம வயது இளையருக்குத் தொல்லை கொடுத்து அவரைத் தாக்கியதன் தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுகளை பிரவே உணவு பான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சிலிகி ரோட்டில் உள்ள பார்க்லேன் கடைத்தொகுதியில் நடந்தது. பிரெஞ்சு நாட்டவரான வூ ஹாக் ழான்-லூக் கா, 44, குடித்துவிட்டு போதையில் மின்தூக்கியில் ஏறியிருந்தார்.

அப்போது 13 வயதாக இருந்த சிங்கப்பூர் இளையரும் அவரது 12 வயது தம்பியும் மின்தூக்கியில் இருந்தனர்.

இளையரைப் பார்த்து தகாத சொற்களைப் பேசிய கா, பின்னர் அவரை நெற்றியில் குத்தியதுடன் இடது கையைத் தாக்கினார். பெயர் குறிப்பிடப்படாத அந்த இளையருக்கு அச்சம்பவத்தால் மின்தூக்கியில் ஏறவே பயம் ஏற்பட்டது.

தாக்குதலைப் பற்றிய நினைவுகள் அவரைப் பாதித்தன. அவரது தூக்கமும் கெட்டதாகக் கூறப்பட்டது.

சிறப்புக் காலணிகளுக்காக லஞ்சம்

புதிய, சிறப்புக் காலணிகளையும் கழிவுவிலைக் காலணிகளையும் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த ஒருவர் மீதும் லஞ்சம் வாங்கிய இருவர் மீதும் நேற்று நீதிமன்றத்தில் நேற்று ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதில் ஒருவர் $12,000க்கும் மேற்பட்ட தொகையை லஞ்சமாகப் பெற்றார். மத்திய லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு இதைத் தெரிவித்தது.

ஃபுட் லாக்கர் எனும் கடையில் துணை நிர்வாகியாகப் பணியாற்றிய சேவியர் கோ யிங்சுவான், 30, மெங் ஃபான்சுவான், 27, என்பவரிடமிருந்தும் மேலும் இரண்டு பேரிடமிருந்தும் 36 முறை லஞ்சம் வாங்கினார். கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை மொத்தம் $12,189 லஞ்சம் பெறப்பட்டது.

மேலும், மெங் ஏடபுள்யூ லேப் எனும் நிறுவனத்தில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றிய முகமது ஃபயிஸ் ஏமி ஜஸ்மான், 28, என்பவருக்கும் லஞ்சம் தந்தார். ஐந்து வெவ்வேறு தேதிகளில் $1,500 லஞ்சம் வழங்கப்பட்டது.

கோ, ஃபயிஸ், மெங் மூவர் மீதும் நேற்று லஞ்சக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும், கோ, ஃபயிஸ் இருவரும் பிராயன் ஃபோங் என்ற மற்றொரு நபரிடமிருந்து தனித்தனியே லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்பட்டது.

கோ, ஃபயிஸ், மெங் ஆகியோர் மீதான வழக்குகளின் விசாரணை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

ஆள்மாறாட்டம் செய்து இருமல் மருந்து பெற்றவருக்கு இரண்டு மாதச் சிறை

பலதுறைத் தொழில்கல்லூரி மாணவி ஒருவரின் காணாமல் போன ஈஸிலிங்க் அட்டையைக் கண்டெடுத்த நபர் ஒருவர், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அதை பீஷானில் உள்ள ஒரு மருந்தகத்தில் காட்டி ஏமாற்றி, இருமல் மருந்தையும் மருத்துவ விடுப்பையும் பெற்றார். பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மேலும் நான்கு முறை மருந்தகத்துக்குச் சென்று அதே குற்றத்தைப் புரிந்தார்.

அதற்காக, அட்டையில் மாணவியின் படத்துக்குப் பதில் தமது படத்தைப் பொருத்தினார் சிங்கப்பூரரான வான் யிப் லூங், 29. பின்னர் ஈஸி லிங்க் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி போலிசார் மருந்தக ஊழியருக்கு தகவல் அளித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மீண்டும் மருந்தகத்துக்குச் சென்று இருமல் மருந்து வாங்க முயன்றபோது வான் பிடிபட்டார்.

நேர்மையற்ற முறையில் அட்டையைக் கைப்பற்றியது, ஆள்மாறாட்டம் செய்தது, போலி ஆவணம் தயாரித்தது ஆகியவற்றின் தொடர்பில் மூன்று குற்றங்களைப் புரிந்ததாக வான் ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டு மாதங்கள், ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மக்­கள் கவி­ஞ­ர் குறித்த கருத்தரங்கம்

மக்­கள் கவி­ஞர் மன்­றம் நடத்­திய பட்­டுக்­கோட்டை கல்­யாண சுந்­த­ரத்­தின் 62வது நினைவு நாள் கருத்­த­ரங்­கம் இம்­மா­தம் 10ஆம் தேதி மாலை மெய்­நி­கர் வழி நடை­பெற்­றது.

மன்­றத்­தின் தலை­வ­ரான புவ­னேஸ்­வரி மகேந்­தி­ரன் தமது தலை­மை­யு­ரை­யில் இந்த இக்­கட்­டான பெருந்­தொற்­றுக் கால­கட்­டத்­தி­லும் தொடர்ந்து மன்­றத்­தின் செயல்­பா­டு­களில் மாண­வர்­கள் பங்­கேற்­றது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இரா தின­க­ரன், மூத்த கவி­ஞர் மா அன்­ப­ழ­கன், ஆகி­யோர் உரை­யாற்­றி­னர்.

கருத்­த­ரங்­கத்­தில் "மக்­கள் கவி­ஞர் பாடல்­களில் சமூக சிந்­தனை­கள்" என்ற தலைப்­பில் முனை­வர் சரோ­ஜினி செல்­ல­கி­ருஷ்­ண­னும், "மக்­கள் கவி­ஞர் பாடல்­கள்­களில் திருக்­கு­றள் சிந்­தனை­கள்" என்ற தலைப்­பில் முனை­வர் ச.ஜெக­தீ­ச­னும் சிறப்­பு­ரை­யாற்­றி­னர்

குவாங்­யங் உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­கள் பிர­வீன், நவ்­ஃபல், டன்­மன் ஹை பள்ளி மாண­வர்­கள் நதிரா, பிளஸ்சி ஆகி­யோர் சிறப்­பு­ரை­யாற்­றி­ய­வர்­க­ளு­டன் கேள்வி பதில் அங்­கத்­தில் பங்­கேற்றனர்.