செல்வாக்கைப் பெருக்க முனையும் ஐந்து நாடுகள் தற்காப்பு ஏற்பாட்டு அமைப்பு

ஐம்­ப­தாண்­டு­களை எட்­டி­யுள்ள ஐந்து நாடுகள் பாது­காப்பு ஏற்­பாட்டு ஒப்­பந்த அமைப்பு, காலத்­துக்­கேற்ப செயல்­படும் அதே வேளை­யில், இந்த வட்­டா­ரத்­துக்கு அப்­பாற்­பட்டு தனது செல்­வாக்­கைப் பெருக்­கு­வ­தைப் பற்றி பரி­ சீ­லித்து வரு­கிறது.

சிங்­கப்­பூர், மலே­சியா, பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சிலாந்து ஆகிய ஐந்து நாடு­கள் அடங்­கிய அமைப்­பின் தற்­காப்பு அமைச்­சர்­கள், இந்த அமைப்பு ஆசி­யான் போன்ற மற்ற பன்­னாட்டு அமைப்­பு­க­ளு­டன் தொடர்­பு­கொள்­ளும் சாத்­தி­யத்தைப் பற்றி கலந்து பேசியுள்ளனர்.

மலே­சி­யா­வின் மூத்த தற்­காப்பு அமைச்­சர் ஹிஷா­மு­தின் ஹுசேன் நேற்று இதைத் தெரி­வித்­தார். ஒபப்­பந்த நாடு­க­ளின் 11வது தற்­காப்பு அமைச்­சர்­கள் கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.

அமைப்­பைக் கட்­டிக்காத்து அதன் செல்­வாக்­கைப் பெரு­வாக்­கு­வது அதன் மிகப் பெரிய சவால் என்­ற­போ­தும் கடந்த 50 ஆண்­டு­களில் கட்­டிக்­காத்த அடிப்­ப­டைக் கோட்­பா­டு­க­ளி­லி­ருந்­தும் பண்­பு­ க­ளி­லி­ருந்­தும் வழு­வப் போவ­தில்லை என்று அவர் சொன்­னார்.

"மிரட்­டல்­களை நம்­பிக்­கை­யு­டன் எதிர்­கொள்­ளும் அதே நேரத்­தில் எந்­தத் தனிப்­பட்ட நாடும் அத்­த­கைய மிரட்­டல்­க­ளைத் தனி­யா­கச் சந்­திக்க முடி­யாது என்ற அடக்­க­மும் தேவை," என்று திரு ஹிஷா­மு­தின் கூறி­னார்.

ஐந்து நாடுகள் பாது­காப்பு ஏற்­பாட்டு ஒப்­பந்­தம், எந்த தனிப்­பட்ட நாட்­டை­யும் குறி­வைக்­காத தற்­காப்பு அமைப்­பாக தொடர்­கிறது என்­றார் சிங்­கப்­பூ­ரின் தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங் எங் ஹென். மேலும் வலுப்­பெற வலுப்­பெற நண்­பர்­கள் கூடு­வர் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

கடந்த 1971ஆண்டு பிரிட்­டிஷ் படை­கள் இங்­கி­ருந்து வெளி­யே­றி­ய­போது ஒப்­பந்­தம் உரு­வாக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூர் அல்­லது மலே­சியா தாக்­கப்­பட்­டால், அது பற்றி கலந்­தா­லோ­சிக்க அது பொதுத் தளத்தை அமைத்­துத் தந்­துள்­ளது.

ஒப்­பந்த நாடு­கள், கிட்­டத்­தட்ட ஆண்­டு­தோ­றும் கூட்டு ராணு­வப் பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வ­து­டன், பயங்­க­ர­வா­தம், மனி­தா­பி­மான உதவி போன்­ற­வற்­றில் ஒத்­து­ழைக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!