‘சுகாதாரத் துறை ஊழியர் பயண விடுப்பு விண்ணப்பம் கவனமாக பரிசீலிக்கப்படும்’

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளுக்­கான பய­ணக் கட்டுப்­பா­டு­கள் இம்­மா­தம் 19ஆம் தேதி முதல் தளர்த்­தப்­பட்டன.

இருந்­தா­லும் அதிக எண்­ணிக்­கை­யி­லான அத்­த­கைய ஊழி­யர்­கள் விரை­வில் வெளி­நா­டு­க­ளுக்குப் பய­ணம் மேற்­கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு அவ்­வ­ள­வாக இருக்­காது என்றே தெரி­கிறது.

ஊழி­யர்­கள் தாக்­கல் செய்­யும் விடுப்பு விண்­ணப்­பங்­களை மிக­வும் கவ­ன­மா­கப் பரி­சீ­லிக்­கப்­போ­வ­தாக மூன்று பொது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை குழு­மங்­களும் தெரி­வித்தன.

ஊழி­யர்­கள் பற்­றாக்­குறை கார­ண­மாக பல செயல்­பா­டு­களும் மேலும் பாதிக்­கப்­பட்­டு­வி­டக்கூடாது என்­பதைக் கருத்­தில் கொண்டு தாங்கள் செயல் படப்போவதாக அந்தக் குழு­மங்­கள் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் விதிக்­கப்­பட்டு இருந்த வெளி­நாட்டுப் பயண விடுப்பு விண்­ணப்பப் பரி­சீ­லனை நடை­முறைத் தடையை அகற்ற சுகா­தார அமைச்சு அண்மையில் முடிவு செய்­தது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­படும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நவம்பர் 21வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளன. இத்­த­கைய ஒரு சூழ­லில், அந்­தத் தடையை அமைச்சு அகற்றி உள்­ளது.

இது பற்றிக் கருத்து கூறிய தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்­தின் மனி­த­வ­ளத் துறை தலைமை அதிகாரி திரு­வாட்டி ஒலி­வியா டே, ­போதிய அள­வுக்கு மனி­த­வ­ளம் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்டிய தேவை இருக்­கிறது என்­றார்.

ஆகை­யால் வெளி­நாட்டுப் பயண விடுப்பு விண்­ணப்­பங்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரம், ஊழி­யர்­க­ளின் தேவை­யைப் பொறுத்து கவ­ன­மா­கப் பரி­சீலிக்­கப்­படும் என்­றார் அவர்.

இது பற்றி கருத்துக் கூறிய சிங்­ஹெல்த் குழு­மத்­தின் துணை தலைமை நிர்­வாகி பேரா­சி­ரி­யர் ஃபோங் கோக் யோங், போதிய அள­வுக்கு ஊழி­யர்­கள் இருப்­பதை மேற்­பார்­வை­யா­ளர்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்டி இருக்­கும் என்­றார்.

ஊழி­யர்­கள் முன்­ன­தா­கவே நன்கு திட்­ட­மிட்டு செயல்­பட ஊக்­க­மூட்­டப்­ப­டு­கி­றார்­கள் என்று தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தார குழு­மத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

குடும்­பத்­தை­விட்டு நீண்­ட­கா­ல­மாகப் பிரிந்து சிங்­கப்­பூ­ரில் வேலை பார்த்து வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!