விழுந்து இறந்த இளைஞரின் ரத்தத்தில் போதைப்பொருள் தடயம்

போதைப்­பொ­ருள் கடத்­தல் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கிய ஜஸ்டின் லீ, 17, என்ற இளை­ஞர் பிப்ரவரி 3ஆம் தேதி கைதா­னார். ஜூன் 24ஆம் தேதி அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

அந்த இளைஞர், செப்­டம்­பர் 16ஆம் தேதி புளோக் ஒன்­றின் மேலி­லி­ருந்து கீழே விழுந்து மாண்டு­விட்­டார்.

அவ­ரின் மர­ணம் பற்றி புலன்­வி­சா­ரணை நடத்­தி­ய­தாக சிங்­கப்பூர் போலிஸ் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

அந்த இளை­ஞ­ரின் ரத்­தத்­தி­லும் சிறு­நீ­ரி­லும் போதைப்­பொ­ரு­ள் மற்றும் தூக்க மருந்­து தடயங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­க அறிக்கை யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இவ்­வே­ளை­யில், குற்­றம் சுமத்­தப்­பட்டு இருந்த அந்த இளை­ஞரை தன் அதி­கா­ரி­கள் நியா­ய­மான முறை­யி­லும் நிபு­ணத்­துவ முறை­யிலும் நடத்­தி­ய­தாக நேற்று வெளி­யிட்ட விரி­வான அறிக்கையில் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு தெரி­வித்­தது.

இந்த ஆண்டு பிப்­ர­வரி 4ஆம் தேதி­யும் ஜூன் 23ஆம் தேதி­யும் ஜஸ்­டின் மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் இரண்டு பரி­சோ­த­னை­க­ளின் போதும் கவலைக்­கு­ரிய அம்­சம் எதை­யும் மருத்து­வர்­கள் கண்­டு­பி­டிக்­க­வில்லை என்­றும் அந்­தப் பிரிவு அறிக்­கை­யில் கூறி­யது.

புலன்­வி­சா­ரணை, வழக்குத் தொடுப்பு நடை­மு­றை­களில் தேவை யற்ற தாம­தம் எது­வும் இல்லை என்­பது இந்­தப் பிரி­வின் உள் புலன்­வி­சா­ர­ணை­கள் மூலம் தெரி­ய­வந்­த­தா­க­வும் மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரிவு அறிக்­கை­யில் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!