நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி நாளில் இஸ்தானா திறப்பு

தீபா­வ­ளியை முன்­னிட்டு நவம்­பர் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பொது­மக்களுக்கு இஸ்­தானா திடல் திறந்­தி­ருக்­கும். நுழைவு இல­வ­சம் என்­றும் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

அந்­தத் திட­லின் புற­வெ­ளிப் பகு­தி­களை மக்­கள் பார்­வை­யி­ட­லாம். தோட்­டங்­களைக் கண்டு களிக்­க­லாம்.

ஆனால் பிர­தான கட்­ட­டத்­திற்­குள் அனு­மதி இருக்­காது.

கலை நிகழ்ச்­சி­கள், உணவு அல்­லது நினை­வுப்­பொ­ருள் விற்­பனை எது­வும் இருக்­காது.

பார்­வை­யா­ளர்­கள் எப்­போ­தும் முகக்­க­வ­சத்­து­டன் இருக்­க­வேண்­டும் என்பது கட்டாயமானது.

சாப்­பி­டு­வது, பானம் அருந்­து­வது உள்­ளிட்ட முகக்­க­வ­சம் அற்ற எந்­தச் செய­லுக்­கும் அனு­மதி இருக்­காது. வரு­கை­யா­ளர்­கள் கொவிட்-19 விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­று­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்த பாது­காப்பு இடை­வெளி தூதர்­கள் பணி­யில் இருப்­பார்­கள்.

தீபா­வளி நாளான நவம்­பர் 4ஆம் தேதி இஸ்­தா­னா­வுக்­குச் செல்ல விரும்­பு­வோர் முன்­கூட்டியே அக்­டோ­பர் 25ஆம் தேதி முற்­ப­கல் 10 மணிக்­கும் அக்­டோ­பர் 26ஆம் தேதி முற்­ப­கல் 10 மணிக்­கும் இடை­யில் நுழை­வுச் சீட்­டுக்கு https://istanaoh2021.myevent360.com/96/participation_form என்ற இணை­யத்தளம் மூலம் விண்­ணப்­பிக்க வேண்­டும்.

அவர்­கள் காலை 9 மணி, 11 மணி, பிற்­ப­கல் 1 மணி, பிற்­பகல் 3 மணிக்­குத் தொடங்­கும் எந்­த­வோர் இரண்டு மணி நேரத்தை­யும் தங்கள் விருப்பமாகத் தேர்ந்­தெ­டுத்­துக்கொள்­ள­லாம்.

மின்­ன­ணுச் சீட்டுக் குலுக்கு மூலம் ஒவ்­வொரு விண்­ணப்­பத்­திற்­கும் இரண்டு நுழை­வுச் சீட்டு­கள் கிடைக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!